பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 இ. அ.ச. ஞானசம்பந்தன் என்றால், முற்றிலுமாகப் பிறப்பை ஒழிப்பதாகும் என்பதே பொருள். சிவஞானத்தில் சில படிகளைக் கடக்கும்போது பிறப்பு இயல்பாக நீங்கிவிடுகிறது. அதனைக் குறிப் பால் உணர்த்தத் தெய்வச் சேக்கிழார் பாங்கினில்: என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தி, இயல்பாகவே' என்ற பொருளைத் தருமாறு செய்கிறார். அடுத்து நிற்பது உவமை இலாக் கலை ஞானம்' என்பதாகும். கலை என்பது மனிதனுடைய மனத்தைச் செம்மைப்படுத்தி, அந்தக் கலை இன்பத்திலேயே மூழ்குமாறு செய்தால், அதுவே உவமை இல்லாத கலைஞானமாகும். நான்காவதாகப் பேசப்டெறுவது உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்' என்பதாகும். உணர்வு என்பது புறத்தே தனித்து நின்று சுட்டப்படும் அறிவைப் போல் உள்ள ஒன்று அன்று. நம்மிடம் வளர்ந்துள்ள அறிவை நாமே புறத்தே நின்று காண முடியும். காரணம், நம்மிலும் அது வேறுபட்டு மனத்திடை வளர்கின்ற ஒன்று. ஆதலால், அறிவைத் தனியே கண்டு அனுப விக்க முடியும். ஆனால் உணர்வு அத்தகையதன்று. உள்ளத்தின் ஆழத்தில், உணர்வு பிறக்கின்ற காரணத் தால் அது பிறப்பதைத் துரிதப் படுத்தவோ, தாமதப் படுத்தவோ இயலாது. அன்றியும் புறத்தே நின்று அறிவு வளர்ச்சியைக் காண்பதுபோல, இதனைக் காண முடியாது. உணர்வில் சிக்கிய ஒருவன் நிலை, நீரில் கரைந்த உப்புப் போல ஆகிவிடுகிறது. தனித்தன்மை இல்லாமல் முழுவதுமாக வியாபித்து, தான்கரைந்த தண்ணிரின் இயல்பை மாற்றி முழுவதும் தன் குணமே