பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் ళ 137 நிறையுமாறு செய்து விடுகிறது உப்பு. அதேபோல, உணர்விடைப்பட்ட ஒர் உயிர் தன் தனித்தன்மை இழந்து அந்த உணர்வு மீதுார்ந்த உயிரையும் தன்னுள் கரைத்துக்கொள்கிறது. சாதாரண உணர்வுக்கும் இந்தப் பொதுத் தன்மை உண்டு ஆதலால், இதனினும் மேம்பட்ட மெய்ஞ்ஞானம் பற்றிக் குறிப்பிட்ட சேக்கிழார் உணர்வு அரிய என்ற தொடரைப் பயன் படுத்துவதன் மூலம், மெய்ஞ்ஞானத்தின் இயல்பையும் உணர்வின் இயல்பையும் விரித்துக் காட்டுகிறார். இப்பாடலில் நான்கு ஞானங்கள் பேசப் பெற்றுள்ளன என்றாலும், முறைவைப்பில் தலை தடுமாறி வைக்கப்பெற்றுள்ளது. அன்னையின் ஞானப் பாலை அருந்தியவுடன் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் பிள்ளையாரை அடைந்தன என்றாலும், நான்கையும் தனித்தனியே பிரித்துப் பார்த்தால், பாடல் என்ற காரணத்தால் முறைவைப்பு மாற்றப் பெற்றுள்ளது என்பது நன்கு விளங்கும். முதலில் இருக்கவேண்டியது கலை ஞானமாகும். இரண்டா வது வரவேண்டியது மெய்ஞ்ஞானமாகும். மூன்றாவ தாக வரவேண்டியது பிறப்பை அறுக்கும் ஞான மாகும். இறுதியாகப் பெற வேண்டியது சிவனடியே சிந்திக்கும் சிவஞானமாகும். பொதுவாக, கலைஞானத்தில் தொடங்கி, சிவனடியே சிந்திக்கும் சிவஞானத்தைப் பெற, பலப் பல பிறப்புக்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு பிறவியிலும் இந்த முறைவைப்பில் வளர்ச்சியடைந்து இறுதியாகச் சிவஞானத்தைப் பெறவேண்டும்.