பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重38 இ. அ.ச. ஞானசம்பந்தன் இந்த முறைவைப்பில் பிள்ளையாருக்கு எதுவும் நிகழவில்லை. அதன் எதிராக, இவையனைத்தும் ஒரே விநாடியில் அவரை வந்து அடைந்தன என்பதைத் தாம் உணர்ந்தார் அந்நிலையில் என்று பாடுகிறார். "அந்நிலையில் என்றால் அதே விநாடியில் என்ற பொருளைத் தரும். அதுமட்டுமல்லாமல் சில சமய வாதிகள் பேசுவதுபோல் கேட்டு, அறிந்து, தெளிந்து, சிந்தித்து நிட்டைகூடுதல் என்பவை பொருளற்ற சொற்களாகிவிடுகின்றன. இதனை உணர்த்தவே இந்தச் சொற்கள் எவற்றையும் பயன்படுத்தாமல், 'தவமுதல்வர் சம்பந்தர் தாம்.உணர்ந்தார்' என்று பாடுகிறார் சேக்கிழார். உணர்தலுக்கு இந்தப் படிகள் தேவையில்லை. ஞானம், சிவஞானம் என்று பேசுவது பொருத்த முடையதே. பிள்ளையாரின் வாழ்க்கையில் கலை ஞானம் எங்கே இடம்பெற்றது என்ற வினாவை எழுப்பினால், சுவையான விடை கிடைக்கும். அது வரை இருந்த இசைப்பாடல் முறையில் புதிய புதிய வடிவுகளைச் சேர்த்து, பன்னிரண்டுக்கும் மேலான இசைப்பாடல் வகைகளையும் பத்தொன்பதுக்கும் மேலான இராகங்களையும் அவர் அமைத்துக் காட்டு கின்றார். நாவரசர் காலம் வரையில் பெருவழக்கில் இருந்த யாழும் அவர் காலத்திலிருந்த வீணையும் சொடுக்கி வாசிக்கப்படுகின்ற கருவிகளாகும். சொடுக்கி வாசிக்கப்படுகின்ற இக்கருவிகளில் கமகம் இடம்பெறமுடியாது. வீணையைச் சொடுக்கி வாசிக்காமல், விருடைகளின் மேல் விரல்களை