பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் ↔ 139 வைத்து இழுத்துக்கொண்டே போவதால் கமகத்தை உண்டாக்க முடியும். இந்த நுண்ணிய கருத்தை 'மிக நல்ல வீணை தடவி (திரு. 2:81:) என்ற சொற்களின் மூலம் கோளறு பதிகத்தில் கமகத்தை முதன்முதலில் அறிவித்த பெருமை பிள்ளையாரையே சாரும். அன்றியும் தாளங்கள் என்று எடுத்துக் கொண்டால் பல புதிய தாளங்களைப் பிள்ளையார் சேர்த்துள்ளார். அந்த அந்தக் காலத்தில் சில பல பண்களையும் பாடியுள்ளார். எனவே, உவமையிலாக் கலைஞானம்’ அவருக்கு வந்தது முற்றிலும் உண்மை என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது. பல பிறவிகளில் பெறவேண்டிய இந்த நால்வகை ஞானத்தையும் பிள்ளையார் பெற்றார் என்று சொல்லாமல் தாம் உணர்ந்தார் என்று கூறுவதன் மூலம் ஈடிணையற்ற ஒரு நிலையை ஒரே விநாடியில் பிள்ளையார் அடைந்துவிட்டார் என்பதையே இப் பாடல் குறிப்பிடுகின்றது. மேலே எடுத்துக்காட்டிய பாடல்களில் இரண்டு சொற்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. காரணம், 'சிவஞானத்து இன்.அமுதம் குழைத்தருளி என்ற தொடரில் சொல்லப்பட்ட கருத்து என்ன என்பதில் இன்றைய நிலையில் கருத்து வேறுபாடுகள் தோன்றி யுள்ளன. சிவஞானத்து இன் அமுதம் குழைத்தருளி' என்று கூறுவதால் அன்னையின் திருமுலைப்பாலில் முன்னரே இல்லாத ஒன்றை, அதாவது சிவ ஞானத்தை, குழைத்து என்றதால் குழைப்பதற்குரிய பொருள் ஒன்று, - திருமுலைப்பால் குழைக்கப் படுகின்ற பொருள் ஒன்று என்ற இரண்டு