பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 இ. அ.ச. ஞானசம்பந்தன் பேசப்பெற்றதாகப் பலரும் நினைக்கின்றனர். இவ்வாறு கூறுவதில் ஒரு புதிய சிக்கல் உருவாகிறது. அன்னையின் திருமுலைப்பாலில் அனைத்துச் சக்தி களும் அடங்கியிருக்குமே; அப்படியிருக்க, சிவ ஞானத்தைக் குழைத்தார் என்றால் அப்பாலில் இதுவரை சிவஞானம் இல்லையோ என்ற வினாவைச் சிலர் எழுப்புகின்றனர். இந்த வினாத் தோன்றக் காரணம் சிவஞானம் என்பது கருத்துப்பொருள் என்பதை நினையாமல் அது ஏதோ பருப்பொருள் என்ற எண்ணம் தோன்றியமையால்தான். இத்தனை பிரச்சினைக்கும் காரணம் குழைத்து என்ற சொல் பயன்படுத்தப் பெற்றமையே. இதிலிருந்து தப்ப, 'குழைக்கப்பட்டது சிவஞானம் மட்டுமல்ல, சோற்றை யும் சேர்த்துத்தான் என்றுகூடச் சிலர் விளக்கம் கூறுவதை இங்கே காண்கிறோம். இந்த நினைவு வருவ தற்குக் காரணம் அடுத்த அடியில் அடிசில் ஊட்ட என்ற தொடரேயாகும். அடிசில் என்ற சொல் வருவ தால், சோறு கலந்த உணவு என்று பொருள் குறிக்கும் அளவுக்கு இவர்கள் விளக்கம் இடம் தந்துவிட்டது. இந்த விளக்கத்தைக் கூறுபவர்கள் ஒன்றை நினைக்க மறந்துவிட்டனர் போலும். கொடுக்கப்பட்டது பசும் பால் அன்று; அன்னையின் திருமுலைப்பால் என்று கூறியவுடன் அதனுடன் இந்த உலகிடை உள்ள சோற்றைச் சேர்ப்பது எவ்வளவு பொருத்தமற்றது என்பதை நினைப்பது நலம். அப்படியானால், குழைத்து என்று சொல்வதன் அர்த்தம் என்ன? குழைக்கப்படும் பொருள் பருப் பொருளாக இருக்கவேண்டும் என்ற தேவையே