பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ. 141 இல்லை. குழைத்தாய் பண்டைக் கொடுவினை நோயை (திருவாச. 496) என்றும் அகங் குழையேன் (திருவாச : 18) என்றும் மணிவாசகர் பாடியுள்ளதில், பருப்பொருள். அல்லாத கொடுவினை போன்ற கருத்துப் பொருளைக் குறிக்கும் இடங்களில் 'குழைத்தல் என்ற சொல் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். எனவே, சிவஞானம் குழைத்து என்பது வடிவமில்லாத கருத்துப்பொருளாய, சிவஞானத்தைக் கலந்து என்ற பொருளில் பயன்படுத்தப் பெற்றதே யாகும். மந்திரங்களின் ஆற்றலைக் குடத்து நீருக்குள் செலுத்தி அந்த நீர் புதிய ஆற்றலைப் பெறுமாறு செய்வதுபோல, சிவஞானம் அன்னையின் திரு முலைப்பாலில் கலக்கப்பெற்றது என்ற பொருளே கொள்ளவேண்டும். பாலைக் கையில் ஏந்தி 'எண்ணரிய சிவஞானம் இதனுடன் புகுவதாக என்று அன்னை அந்தப் பாலுக்குப் புதிய ஆற்றலைத் தந்தாள் என்பதே பொருளாகும். அடுத்துள்ள சொல் அடிசில்' என்பதாகும். அடப்பண்ணி வைத்தமையின் அடிசில் என்ற பெயரைப் பெற்றது. அவ்வாறு இல்லாத ஞானப் பாலுக்கு இந்தச் சொல் ஒரளவும் பொருந்து மாறில்லை. ஆனால், பாடியவர் தெய்வச் சேக்கிழார். ஏதோ ஒரு புதிய கருத்தை நுண்மையாகத் தெரிவிப்ப| தற்காகவே அன்னை கொடுக்கின்ற பாலைக் குறிக்கும் இரண்டு இடங்களிலும் பால் அடிசில் என்றார். உலகிடை வழங்கும் அடிசில் என்ன செய்கிறது? உண்பவரின் பசிப்பிணியைப் போக்குகிறது. மனத்தில்