பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii கம்பநாடரின் தமிழையும் சேக்கிழாரின் பக்தி மணக்கும் பெரியபுராணத்தின் சீர்மையும் பரப்புவதி லேயே முனைப்புடன் நின்றவர்கள். அவர்கள் திரு முறைகளில் கொண்டிருந்த ஈடுபாடு அளப்பரியது. பேராசிரியர் மாலைக்கால வாழ்வு ஆங்கிலக் கவிஞன் மில்டனின் வாழ்வை நிகர்த்ததாக அமைந்தது. அக்கவிஞன் தன் பார்வையை இழந்த நிலையிலேயே துறக்கநீக்கம், துறக்கமீட்சி ஆகிய காப்பியங்களை எழுதினான். நம் பேராசிரியர் அ.சஞா. அவர்களும் தம் பார்வையை இழந்த நிலை யிலும் தமிழ்ப்பணியில் ஓயாமல் ஈடுபட்டார்கள். மற்றொருவர் உதவியுடன் தொடர்வண்டிப்பயணம் மேற்கொண்டு சில கூட்டங்களுக்குச் சென்று கலந்து கொண்டார்கள். மூப்பின் காரணமாகத் துன்பமிக்க அப்பயணங்களைத் தவிர்க்க வேண்டி நேர்ந்தது. அவர்களால் வீட்டில் வாளா இருக்க முடியவில்லை. அவர்கள் தாம் கற்றத்தேர்ந்த இலக்கியங்களைக் குறித்து மீளவும் நீள நினைந்தார்கள். அவர்தம் குரல்வழி வந்த கருத்துகளை விரல்களாக அமைந்து எழுத்துருவாக்கியவர்கள் அவர்தம் அருமைத் திருமகளார் திருமதி மீராவும், யாழ்பாணத் தமிழன்பர் திரு மார்க்கண்டுவும் ஆவர். அவ்வாறு வெளிவந்த வற்றில் குறிப்பிடத்தக்கவை இராமன் பன்முக நோக்கில், திருவாசகம் விரிவுரை ஆகியனவாகும். பேராசிரியர் அ.ச.ஞா அவர்கள் உடல்நலம் குன்றியிருந்த நாள்களிலும் ஓயாமல் ஆய்வுப்பணியில் தோய்ந்திருந்தார்கள். மறைவதற்கு இருநாள்கள் முன்வரை ஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட