பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii நிகழ்ச்சிபற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அவர் மறைவுக்குப்பின் அவரது குடும்பத்தினரும் டாக்டர் சிவராஜன், திரு கெளரிசங்கர், யாழ்ப்பாணம் ச. மார்க்கண்டு போன்றோரும் அவர்கள் படைத்து நிறைவடையாமல் இருந்த மூன்று கட்டுரைகளைத் தொகுத்து முற்றுறாச் சிந்தனைகள் என்னும் அழகிய தலைப்பில் வெளியிடுகின்றனர். இக்கட்டுரைகள் முறையே திருமுருகாற்றுப்படை, திருக்குறள், திருஞான சம்பந்தர் ஆகிய பொருள் பற்றியனவாகும். முதற்கட்டுரையில் பக்திக்கு முதன்மை தந்த முதல் தமிழ்இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை திகழும் பெற்றி பேசப்படுகிறது. கற்றுத் தேர்ந்த மறைவல்லாருக்கும் கல்வியறிவே இல்லா மலைவாழ் மக்களுக்கும் முருகப்பெருமான் அவர்கள் வேண்டி யாங்குக் காட்சி தருகிறான். திருவேரகத்து மறையவர் களோ மெல்ல அவன் மந்திரத்தை உதட்டால் ஒலிக்கின்றனர். குன்றவர்களோ திக்குகள் எதிரொலிக்க உரக்க அழைக்கின்றனர். இவ்விரு திறத்தோர்க்கும் இடையே ஏதேனும் பொதுத்தன்மை இருக்கிறதா என்னும் வினாவை எழுப்பி அதற்கு விடையாகத் தன்னலமற்ற பக்தி இருக்கிறது என்பை மிகச் சிறப்பாக நிறுவி யுள்ளார்கள். - உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை என்னும் அடிகளுக்குப் பேராசிரியர் அவர்கள் - எழுதியுள்ள பதசாரம் அவர்தம் கூர்த்த மதிநலத்தைக் காட்டுகிறது. -