பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix "எல்லா இடங்களிலும் தேடிச் சென்று அங்கு ஒன்றும் பயன்கிட்டாமையின் இறுதியாக அவன் திருவடியே புகலிடம் என்று வருகின்றார்கள் ஆதலின் 'உறுநர் என்றார்” 'இறைவன் நம்மைத் தாங்கும் பொழுது யார் நம்மைத் தாங்குகிறார் என்று நமக்குத் தெரியாது. பின்னால் இருந்து தாங்குகின்றான் ஆதலின் இறையருள் பின்னர் நின்றுதான் காக்கும் என்பதை அறிவுறுத்தவே உறுநர்த் தாங்கிய என்றார்". உறுநர் என்பதற்குத் திருவடிகளை வந்து அடைபவர்கள் என்று பொருள்கொள்வதனினும் 'மனத்தால் அவன் திருவடிகளை நாட வேண்டும் என்று எண்ணியவர் என்று பொருள் கொள்வது பொருத்தமுடையதாகிறது” "இங்குச் செல் என்பதற்கு மேகம் என்று மட்டும் பொருள் கொள்ளாமல் அதன்கண் தோன்றும் இடியையே பொருளாகக் கொள்கின்றோம். செல்' என்பதற்கு மேகம் என்றே பொருள் கொண்டாலும் கைம்மாறு கருதாமல் வாரி வழங்குகின்ற மேகத்தைப் போன்ற கையையுடையவன் என்றும் கருதமுடியும்” இப்பகுதிகள் பேராசிரியரின் பழுத்த தமிழ்ப் புலமையைக் காட்டுவதோடு பழச்சுவையாய் இனிக் கின்றன. இக்கட்டுரை முற்றுப்பெற்றிருக்குமானால் நக்கீரரின் அறிவு பக்திகளின் நீள அகலங்களை நாம் எளிதில் உணர்ந்துகொள்ள வாய்ப்பாக இருந் திருக்கும். என்ன செய்வது? திருமுருகன் திருவருள் அவ்வளவுதான் போலும்!