பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XX அடுத்து இடம்பெற்றுள்ள திருக்குறளில் சில சிந்தனைகள் என்னும் பகுதியினை விரிவான அடித் தளம் அமைத்துக் கொண்டு எழுதத் தொடங்கி யுள்ளார்கள். திருவள்ளுவர் அழிந்துவரும் தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதற்காகவும் உலகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு பொதுநூல் படைக்க வேண்டும் என்பதற்காகவும் தம்நூலை எழுதத் தலைப் பட்டார் என்னும் அடித்தளத்தில் நின்று திருக் குறளுக்குத் தம் அறிவியல் மானிடவியல் புலமை நலங்கொண்டு விரிவாக விளக்கம் காண முனைந் துள்ளார்கள். முதல் இரண்டு அதிகாரங்களக்கு விரிவான ஆய்வு நிகழ்த்தியுள்ளார்கள். இவ்விளக்கத்தில், பேராசிரியர் அவர்கள் தம் சிந்தனைகளை நறுக்குத் தெறித்தாற்போல் மிகமிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்கள். “இச்சமுதாயத் திற்குச் சமய நூலொன்றைத் தருவது வள்ளுவரின் நோக்கமன்று. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றின் அடிப்படையில் தனிமனிதனுக்கும் சமு தாயத்திற்கும் சில அடிப்படையான சட்டதிட்டங் களை வகுப்பதே திருக்குறளின் தலையாய நோக்க மாகும்” என்று வரையறுத்துக் கூறுவது தேர்ந்த நடுவராயத்தீர்ப்புப் போலத் திகழ்கிறது. "திருக்குறளுக்கு எத்தனையோ விளக்கங்கள் வந்துவிட்டன எனினும் இன்னும் புதுப்பொருள் காணுவதற்கு இடமுண்டு, திருக்குறள் வற்றாத சுரங்கம்” என்று அறிவிப்பதுபோலப் பொறிவாயில் ஐந்தவித்தான் என்பதற்குப் பேராசிரியர் அவர்கள் வரைந்துள்ள விளக்கம் அமைந்துள்ளது. அவித்தான்