பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi என்ற சொல் இயற்றுதற்கருத்தாவாக நின்று பிறிதோர் பொருளிடத்துள்ள ஒரு நிலையை மாற்றி மற்றோர் நிலைக்குக் கொண்டுவருபவன் என்ற பொருளைத் தந்து நிற்கிறது. இட்டலி அவித்தான்', 'தீயை அவித்தான்', 'கிழங்கை அவித்தான் முதலிய தொடர் களில் அப்பொருளைத் தெளிவாகக் காணலாம் என்று விளக்கி, ஐந்து பொறிகளை உடையவன் ஒருவன், அந்த ஐந்து வாயில்களை அவிக்கிறவன் மற்றொருவன் என்பதனைத் தெளிவுபடுத்திப் பொறிகளைப் பழமை துறந்து புதுமுறைகளிற் பணிசெய்யச் செய்தவனை அவித்தான் என்ற சொல்லால் ஆசிரியர் குறிப்பிடுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று முடிந்துள்ளார்கள். இப்பகுதியைப் படிக்கும்போது மனம் கண்டறியாதன கண்டேன்' என்று இன்பக்களிப்பில் பாடிப் பரவசம் அடைகிறது. ஆதிபகவன் என்னும் சொல் சமயங்கள் அனைத்துக்கும் பொதுமையானது என்று காட்டும் நேர்த்தியும், இறைவன் என்னும் சொல்லின் சீர்மையைக் காழிப்பிள்ளையாரின் திருவிழிமிழலைத் தேவாரம் கொண்டு விளக்கும் பாங்கும் பேராசிரியர் அவர்கள் ஒருவருக்கு மட்டுமே சாத்தியப்படும் திறமையாகும். இறையுணர்வில்லாத வாழ்க்கை விலங்கினும் கீழான வாழ்க்கையாகவே முடியும் ஆதலால் எல்லா வற்றிற்கும் முன்னர்க் கடவுள் பற்றிய சிந்தனைகளை முதலாம் அதிகாரத்தில் வைத்தார் என்றும், உயிர்கள் செம்மையான அறநெறியைக் கடைப்பிடித்து