பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii இல்லறம் நடத்திச் சமுதாயமாக வளர்ந்து சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமானால் அதன் முதல்தேவை உணவு அல்லது நீர். எனவே அறம் என்றால் என்ன என்பதைச் சொல்லத் தொடங்கு வதற்கு முன்னர், இன்றியமையாத நீரை முதலில் வைத்தார் என்றும் வைப்பு முறைக்குக் காரணம் காட்டும்பகுதி இன்னொரு பரிமேலழகரைப் பேராசிரியர்பால் காணச் செய்கிறது. வான்சிறப்பு அதிகார விளக்கத்தில் தானம், தவம் இரண்டும் இல்லறத்தானுக்கு உரியன என்று பேராசிரியர் அவர்கள் புதிய விளக்கம் தந்துள் ளார்கள். அவர்களின் இச்சிந்தனைக்கு அடியாய் அமைவது தொல்காப்பியக் கற்பியலில் இடம் பெற்றுள்ள 'காமஞ்சான்ற என்னும் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் வரைந்த உரையாகும். உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் இந்நூற்பாவுக்குத் தந்த தவறான விளக்கம் தமிழறிஞர் பலரின் சிந்தனை ஒட்டத்தை மடைமாற்றிவிட்டது. இந்நூற்பாவுக்கும் தவத்திற்கும் இம்மியும் தொடர்பில்லை. நூற்பா அமைந்துள்ள இயல், இயலில் அஃது இருக்கும் இடம் எல்லாம் இக்கருத்துக்கு மாறாக அமைகின்றன. காமம் நிறைந்த கற்பொழுக்கமாகிய கைகோள் நிகழும் காலத்தில் (அஃதாவது இல்வாழ்க்கை நிகழும் போது) பாதுகாப்பாய் அமைந்த மக்களோடு தழைத்து அறத்தைச் செய்கின்ற சுற்றத்தினரோடு தலைமகனும் தலைமகளும் கூடி இல்லத்திற்குச் சிறந்ததாகிய விருந்தோம்பலைப் பலகால் செய்தல் பொருள் ஈட்டப் பிரிந்ததன் பயனாகும் என்பதே அந்நூற்