பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii பாவின் நேரிய பொருளாகும். இல்லறத்திற்குத் தானத்தையும், துறவறத்திற்குத் தவத்தையும் உரிமைப் படுத்தும் பரிமேலழகர் உரையை எளிதாகத் தள்ளு வதற்கில்லை. ஆதலின் இப்பகுதி மேலும் ஆழ்ந்து ஆய்வுசெய்யக் கற்பாரைத் துரண்டும் வகையில் அமைகிறது. - திருக்குறளுக்குப் பரிமேலழகர் போக்கில் நுட்பமாக உரைவகுக்கத் தொடங்கிய நாகை தண்ட பாணியார் உரை அறத்துப்பால், பொருட்பாலில் சில அதிகாரங்கள் என்ற அளவில் நின்றுபோயிற்று. 'தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் எழுதிய விரிவான விளக்கம் முதல் சில அதிகாரங்களுக்கு மேல் செல்லவில்லை. அதுபோலப் பேராசிரியர் அவர்களின் விளக்கம் முதல் இரண்டு அதிகாரங் களோடு முடிந்ததும் தமிழர்தம் தவக்குறையே ஆகும். ஆனால் திருக்குறளுக்கு விரிவான விளக்கம் எழுத விழைவோர்க்குப் பேராசிரியர் அவர்கள் வரைந் துள்ள விளக்கம் கைகாட்டி மரம் போல அமைந்து செல்ல வேண்டிய பாதையினைத் தெரிவிக்கிறது என்று அமைதிகாணலாம். பேராசிரியர் அவர்களுக்கு நாயன்மார்களிடம், குறிப்பாகத் திருஞானசம்பந்தரிடம் மிகுந்த தோய்வு உண்டு. அவர்கள் மறைவதற்கு ஒருசில நாள்களுக்கு முன்னர் இல்லத்தில் சென்று கண்டேன். அவர் களுடைய முகத்தில் அதற்கு முன்னர் இருந்ததை விடத் தெளிவும் மலர்ச்சியும் இருந்தன. "ஐயா, சென்ற முறை இருந்ததைவிடத் தெளிவாகக் காணப்படு கிறீர்கள். உடல்துன்பம் குறைந்திருப்பதுபோலத்