பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv தெரிகிறதே?" என்றேன். அதற்கு, "நீ சொல்வது சரிதான். இரவு தூக்கம் வரவில்லை. அதனால் இரவெல்லாம் ஞானசம்பந்தரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். அதனால்தான் முகம் தெளிவாகத் தெரிகிறது” என்றார்கள். அச்சிறிய பெருந்தகை யாரிடம் அவர்களுக்கிருந்த பெரிய பிடிப்பை எண்ணி மனத்திற்குள் வியந்தேன். அவர்கள் எழுதிய ஞானசம்பந்தர் பற்றிய முற்றுப்பெறாத பகுதியே மூன்றாவதாக அமைந் துள்ளது. இதில் ஞானசம்பந்தர் வினையடியாகப் பிறந்தவர் அல்லர் என்பதும் இறைவன் திருக்குறிப் பால் பிறந்தவர் என்பதும் முதலில் தெளிவாக்கப் பட்டுள்ளன. இதற்குத் திருத்துருத்தித் தேவாரத்தில் காணப்படும் குறிப்பைச் சான்றாகக் காட்டுவது அரிய கருத்தாகும். சேக்கிழாரின் வாக்காகிய மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை தானோ என்பதில் பயிலும் உணர்தல் என்னும் சொல்லின் ஆழத்தையும், 'இன்னமுதம் குழைத்தருளி என்பதில் வரும் 'குழைத்து என்பதன் பொருளையும் அழகுற விளக்கி யுள்ளார்கள். குழைத்தல் என்பதற்குக் கலத்தல் என்று பொருள் சொல்லியுள்ளார்கள். தெய்வச் சேக்கிழாரின் அரிய வாக்கு சிவனடியே சிந்திக்கும் என்னும் பாடல். ஆனால் அதன்பொருள் உணர்வது அரிய முயற்சி. அதனை மிக அழகாகத் தெளிவு படுத்தியுள்ளார்கள். அதில் நான்கு ஞானங்கள் குறிக்கப்படுகின்றன. அவை கலைஞானம், மெய்ஞ் ஞானம், ஒங்கிய ஞானம், சிவஞானம் என்பன. இவற்றுள் கலைஞானம் அவர் படைத்த புதிய இசைப்