பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை சில குறிப்புகள் சங்க இலக்கியம் எனப் பெயர்பெறும் பழந் தமிழர்களுடைய இலக்கியங்கள் கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டுக் கிறிஸ்து வின் பிறப்புவரை நீண்டிருந்தன. இந்த இலக்கியங் களை இரண்டாகப் பிரித்தார்கள். நீண்ட பாடல் களை ஒன்றாகத் தொகுத்துப் பத்துப்பாட்டு என்று பெயர் கொடுத்தார்கள். அவை திருமுருகாற்றுப்படை தொடங்கி, மலைபடுகடாம் ஈறாகவுள்ள பத்துப் பாடல்களாகும். மூன்று அடி முதல், முப்பத்தொரு அடிவரையுள்ள பாடல்களைத் தொகுத்து எட்டுத் தொகை என்று பெயர் தந்தனர். அவை ஐங்குறுநூறு முதல் அகநானூறு வரையுள்ள எட்டுத் தொகுப்பு களாகும். முதற் தொகுப்பிற்குப் பத்துப்பாட்டு என்று பெயர் கொடுத்தவர்கள் இரண்டாவது தொகுப்பிற்கு எட்டுத் தொகை என்று பெயர் கொடுத்தார்கள். திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டில் முதற்பாட லாகும். கிறிஸ்துவிற்கு எட்டு நூற்றாண்டுகள் முன்னர்த் தோன்றியது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலாகும். உலகத்தில் வேறு எந்த மொழி இலக்கணத் திற்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு தொல்காப்பியத் திற்கு உண்டு. எழுத்தியல், சொல்லியல் என்ற இரண்டுடன் பிற மொழி இலக்கணம் நின்றுவிடும். தொல்காப்பியத்தில் மட்டும் பொருளதிகாரம் என்ற ஒன்றும் இடம் பெற்றுள்ளது. தமிழர்களுடைய