பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ல் அச. ஞானசம்பந்தன் வாழ்வியல் முறையை வகுத்துப் பிரித்து விளக்கிக் கூறுவது பொருளதிகாரம் ஆகும். இதில் ஒன்பது இயல்கள் உள்ளன. வீட்டிற்குள் கணவன் மனைவி என்பவர்கள் சேர்ந்து வாழும் வாழ்க்கையை அகத்திணை என்று பெயரிட்டனர். ஒன்பது இயல்களுள் புறத்திணை இயல் என்பதும் ஒன்றாகும். வீட்டைவிட்டு, வெளியே நடைபெறும் அத்தனை செயல்களும் புறத்திணையில் கூறப்பெறும். இப்புறத்திணையில் பல்வேறு திணை களும், துறைகளும் உண்டு. அதில் இடம்பெறுவது தான் ஆற்றுப்படை என்பதாகும். ஆற்றுப்படை என்றால் ஆற்றுப்படுத்தல் அதாவது வழியிற் செலுத்துதல் என்ற பொருளைத் தரும். இதற்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறிஇச் சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும் (தொல். பொரு. புறம் 30) என்று ஆற்றுப்படை இலக்கணத்தைக் கூறுகிறார். ஆற்றிடைக் காட்சி என்றால், செல்ல வேண்டிய வழியில், யார் யார் இருக்கிறார்கள்? அங்கே இவர் களுக்கு என்ன கிடைக்கும் என்பதையெல்லாம் மிக விரிவாகச் சொல்வதாகும். 'உறழத் தோன்றி என்றால் அடுத்தடுத்து என்னென்ன நிலங்கள் உள்ளன என்பது பற்றிய விரிவான விளக்கமாகும்.