பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுதாச் சிந்தனைகள் ல் 3 பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ' என்பது குறிப்பிட்ட வள்ளலிடம் சென்று தாங்கள் பெற்ற நன்மைகளை, சிறப்புக்களை இன்னும் பெறாமல் வருந்திக் கொண்டிருப்பவர்க்கு எடுத்துச் சொல்லி என்று பொருள்படும். சென்று பயன் எதிர' என்பது நீயும் அங்கே சென்று நாங்கள் பெற்ற இந்தப் பயனைப் பெறு வாயாக என்று சொல்வதாகும். இதுவே ஆற்றுப்படை இலக்கணமாகும். இந்த அடிப்படையை ஒட்டிப் பத்துப்பாட்டில் பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை என்ற மூன்று ஆற்றுப்படை களும் திருமுருகாற்றுப்படையோடு சேர்ந்து இடம் பெற்றுள்ளன. மேலேயுள்ள முதல் மூன்று ஆற்றுப்படைகளும் பொருநரை (கூத்தரை) ஆற்றுப்படுத்தியது, சிறிய யாழ் வாசிக்கும் சிறுபாணரை ஆற்றுப்படுத்தியது, பேரியாழ் வாசிக்கும் பெரும்பாணரை ஆற்றுப் படுத்தியது என்ற முறையில் பொருள்படும். ஆனால் இதற்கு மாறாக முருகாற்றுப்படை யென்பது 'முருகனை ஆற்றுப்படுத்தல் என்று பொருள் விரியாமல் 'முருகனிடத்து ஆற்றுப்படுத்தல்' என்ற பொருளைத் தரும். முன்னர்க் கூறிய மூன்று ஆற்றுப்படைகளிலும், ஆற்றிடைக் காட்சி என வரும் பகுதி, நால்வகை நிலங் களையும் வர்ணித்து, அந்தந்த நிலங்களில் வாமம் மக்கள், வழிபடும் தெய்வம், உண்ணும் உண நிலத்தில் வளரும் மரங்கள், அறிவ