பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ళ அ.ச. ஞானசம்பந்தன் என்பது பிறவிச் சுழற்சியில் நிலைபெற்று ஒரறிவு உயிராகிய புல் முதல் ஆரறிவுள்ள மக்கள், தேவர் வரையில் தொடர்ந்து செல்லும் இயல்புடையதாகும். இதனையே பின்னர் வந்த மணிவாசகப் பெருமான் ‘புல்லாகிப் பூடாகி..' என்று தொடங்கி எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் (திருவாச, 1-3) என்று கூறுகிறார். இவ்வளவு விரிவாக அடிகளார் கூறியதைத்தான் நக்கீரர் நின்னளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமை என்றார். 'மனிதராய்' என்ற ஒரு சொல்லால் மானிட சாதி முழுவதையும் மணிவாசகர் குறிப்பிட்டாரேனும் அந்த மானிடசாதியில் பல்வேறு நிலையிலுள்ள மக்கள் கூட்டம் உள்ளது என்பதைத் திருமுருகாற்றுப் படை விரிவாகப் பேசுகிறது. இந்தப் பல்வேறு நிலை களில், இறைப்பொருளின் இயல்பை உணர்ந்து, எல்லையற்ற ஈடுபாட்டுடன் அவனை வழிபடும் கூட்டத்தார், மானுட சாதியில் மிக உயர்ந்து நிற்கின்ற னர். இவர்கள் அருமறைக் கேள்வியுடையவர்கள். மந்திரங்களை நன்கு அறிந்தவர்கள். வாய்விட்டு உச்சரித்தால் அதன் ஆற்றல் குறைந்துவிடும் என்பதற் காக மனத்திற்குள்ளேயே அதனை உச்சரிக்கும் பேராற்றல் படைத்தவர்கள். முருகனுடைய மந்திர மாகிய சரவணபவ” என்பதை மனத்திற்குள்ளேயே உச்சரித்து, ஜபம் செய்பவர்கள் இவர்கள். இவர்களை ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி (அடி : 186) உடையார் என்கிறார். திருவேரகம், என்ற ஊரைப் பற்றிப் பாடும்பொழுது இத்தகையவர்கள் வழிபடும் இடம் என்று பாடுகிறார் நக்கீரர். மனித சமுதாயத்தின் மிக உயர்ந்தநிலை யாகும் இது.