பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 7 இதற்கு நேர் விரோதமாக, கல்வியறிவு என்பது ஒரு சிறிதும் இன்றி, மந்திரம் என்ற சொல்லையோ அதன் பொருளையோ அறியாத கடைநிலை மக்கள் ஒருபுறம். இவர்கள் வழிபாட்டுமுறை விநோதமானது. சிவந்த உடை உடுத்து, சிவந்த மலர்களுடைய மாலை அணிந்த வேலன் எனப்படும் பூசாரி, இவர் களிடையே செம்மறி ஆட்டை அறுத்து, அதன் இரத்தத்தில் அரிசியைக் கலந்து அதை எடுத்து எட்டுத் திசைகளிலும் விசிறிவிட்டு உடுக்கை முதலிய வாத்தியங்களை வாசித்து 'முருகா என்று பெருங் கூச்சலிட்டு அழைக்கின்றான். எத்தகைய வேறுபாடு ! திருவேரகத்தில் உள்ளவன் வாய் திறந்து மெல்லிய குரலில் அவன் பெயரைச் சொல்லக்கூட அஞ்சுகிறான். ஆனால் வேலன் வெறியாடுகின்ற களத்தில் அவன் முருகனை அழைக்கின்றபொழுது எட்டுத் திக்குகளும் எதிரொலிக்கின்றன. என்னே ஆச்சரியம்! இந்த ஒன்றுக்கொன்று முரணான இரண்டிடங்களிலும் அதே முருகன் வேண்டினர் வேண்டியாங்கு (அடி : 248) வெளிப்படு கிறானாம். மனித வளர்ச்சியில் மேல் தட்டில் இருப்ப வர்களுக்கும் அறியாமையில் மூழ்கிக் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா? இல்லை என்றுதான் நாம் சொல்வோம். அப்படி யானால் ஒரே முருகன் எப்படி இந்த இரண்டு கூட்டத்தாரிடமும் வெளிப்பட்டுக் காட்சி தருகிறான்? அவன் காட்சி தருகிறான் என்பதை அறிந்த பின்னர், மேலே உள்ள இரண்டு கூட்டாத்தாரிடையே, ஏதேனும் பொதுத்தன்மை உண்டா என்று சிந்திக்கத்