பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இல் அக ஞானசம்பந்தன் தொடங்கினால், இதுவரை நாம் காணாத ஒர் உண்மை, மலை போல வெளிப்பட்டு நிற்கும். இந்த இருவகைக் கூட்டத்தாருக்குமிடையே உள்ள பொதுத்தன்மை என்ன தெரியுமா? நான்' என்பதை இழந்த பக்திதான். முதல் கூட்டத்தார் அறிவின் துணைகொண்டு அவன் இயல்புகளை ஆராயத் தொடங்கி, அது முடியாமையால் அவன் திருவடியே சரணம் என்று தம்மை மறந்து பக்தியில் ஈடுபடுகின்றனர். இரண்டாவது கூட்டத்தாருக்கு அந்தப் பிரச்சினையே எழவில்லை. அறிவே இல்லாத காரணத்தால் அவர்கள் ஆராய்ச்சியில் புகவில்லை. இறையிலக் கணத்தை அவர்கள் அறியாதவர்கள். ஆனால் வேலன் என்ற பெயருடைய முருகப் பெருமான் தங்கள் தலைவன், தம்மில் ஒருவன் என்பதை உணர்ந் திருந்தார்கள். ஆதலின் தம்மை மறந்த நிலையில்’ முருகா என்று அழைக்கின்றனர். இவர்கள் பக்தியும் முதல் தொகுதியினர் பக்தியும் ஒன்றே ஆதலின் இரண்டு இடத்தும் முருகன் வெளிப்படுகின்றான். ஆனால் ஒரு வேற்றுமை. வேலன் வெறியாடு களத்தில் செச்சைக் கண்ணியனாய் (அடி : 208) - சிவந்த மாலை அணிந்தவனாய் - செவ்வாடை உடையவனாய்த் தோன்றி இவர்களுக்குக் காட்சிதரும் முருகன், திருவேரகப் பகுதிப் பக்தர்களுக்கு இதே வடிவத்துடன் காட்சி தந்தால் அவர்கள் மனம், அதை ஏற்றுக் கொள்ளாது. இந்த வடிவில் அவர்கள் ஈடுபடவும் முடியாது. அவர்களுக்கு ஏற்ற முறையில் அவன் வெளிப்பட வேண்டும். ஆம். முருகன் அதையும் செய்கிறான்.