பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 9 கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த மாபெரும் தத்துவத்தை அறிந்த நக்கீரர் இரண்டே வரிகளில் இதனைச் சொல்லிச் செல்கிறார்: வேண்டினர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே' - (அடி 248, 249) என்று பாடிச் செல்கிறார். உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள் செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை மறுஇல் கற்பின் வாணுதல் கணவன் (அடி 1-6) சேண்-துரம், மதன்-அழகு, நோன்-வலிமை, செறுநர்-பகைவர், செல்-மேகம். சிவந்த ஞாயிறு கடல் முகட்டில் தோன்றும் போது அது எப்படி வரவேற்கப்படுகிறது என்பதை முதல் இரண்டு அடிகளிற் பேசுகிறார். 'உலகம் உவப்ப என்றும், 'பலர் புகழ்' என்றும் கூறியதற்குக் காரணமுண்டு. உலகிலுள்ள எல்லா உயிர்களும் தம் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்ற கதிரவனைக் கண்டவுடன் மகிழ்கின்றன. சிறு சிறு விலங்குகள் முதல் எல்லா உயிர்களும் கதிரவன் வரவால் மகிழ்ச்சியடைகின்றன. ஆனால் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆற்றலோ, அந்த மகிழ்ச்சிக்குக் காரணமாகவுள்ள கதிரவனைப்