பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இ. அ.ச. ஞானசம்பந்தன் போற்றவோ மனிதர்களைத் தவிர ஏனைய உயிர் களுக்கு வாய்ப்பில்லை. ஆதலால் அவை உவக்க மட்டுமே முடியும் என்பதற்காக உவப்ப என்று தனியே கூறினார். பேசும் ஆற்றலுடைய மனிதன் மட்டுமே புகழவும் இகழவும் வல்லான் ஆதலின் தன்னை வாழவைக்கின்ற கதிரவனைப் புகழ் கின்றான். இப்படிப்பட்ட கதிரவனைக் கடல் முகட்டில் கண்டதுபோல முருகப் பெருமான் காட்சியளிக் கிறான் என்று பின்னே சொல்லப் போகின்றார். உவமையை இங்குக் கூறி ஆங்கு என்ற உவமை உருபையும் இதனோடு சேர்த்துவிட்டார். இனி, வடிவு தாங்கி நிற்கின்ற முருகப் பெருமானைப் பற்றிக் கூறவந்தவர், அவனுடைய முகமண்டலத்தின் அழகு, கருணை, கருணையைப் பொழிகின்ற விழிகள் என்பவற்றைத் தனியே குறிப் பிடாமல் ஒளி வடிவினன் என்பதைக் குறிக்க, சேண் விளங்கு அவிர் ஒளி என்றார். அடுத்துத் திருவடி, திருக்கை என்ற இரண்டையுமே பேசுகின்றார். ஒளியை முதலிற் கூறித் திருவடியை அடுத்துக் கூறித் தடக்கையை மூன்றாவதாகக் கூறியதில் ஒரு நுணுக்கம் உண்டு. கடவுட் காட்சிக்கும், மனிதக் காட்சிக்கும் உள்ள வேறுபாடாகும் இது.துாரத்தே ஒரு மனிதரைக் கண்டால் முதலில் அவருடைய வடிவு தான் தெரியும். பக்கத்தில் வரவர உடம்பு, கை முதலியன தெரியும், இன்னும் நெருங்கி வரும்போது கால்கள் தெரியும். மேலும் நெருங்கும் போது நிறம் அல்லது வண்ணம் தெரியும். இறைவன் ஒளி