பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 11 வடிவினன் ஆதலால் அவன் கோலம் தாங்கி வரும் போது முதலில் தெரிவது ஒளியே ஆகும். அடுத்துக் காட்சியளிப்பது அவனுடைய திருவடியே ஆகும். இதனையே மணிவாசகப் பெருமான் வண்ணந்தான் அது காட்டி வடிவு காட்டி மலர்க் கழல்கள் அவை காட்டி (திருவாச:29) என்று திருவாசகத்தில் பாடுகிறார். இறைவனுடைய திருவடி உயிர்கட்கு அடைக் கலம் தரும் இடமாதலால் உறுநர்த்தாங்கிய மதன் உடை நோன்தாள்’ என்றார். யாரை முருகன் தாங்கு கிறான்? எல்லையற்ற துன்பங்களில் அகப்பட்டுத் தமக்கும் ஒரு விடிவுக் காலமுண்டோ என்று கருதி, எல்லா இடங்களிலும் தேடிச் சென்று, அங்கு ஒன்றும் பயன் கிட்டாமையின் இறுதியாக அவன் திருவடியே புகலிடம் என்று வருகிறார்கள் ஆதலின் உறுநர்’ என்றார். அப்படி வருபவர்களைத் துரத்தே இருந்து கொண்டு அஞ்சாதே என்று அபயகரம் காட்டினால் மட்டும் போதாது. துன்பத்தில் துவண்டு தம்முடைய முயற்சியால், செயலால் நிலைபெற்று நிற்க முடியாது என்ற நிலையில்தானே அடைக்கலம் தேடி வருகிறார்கள்! எனவே தள்ளாடி வருபவர்களைத் தாங்கிக் கொள்கிறான் என்பதை உணர்த்தவே 'உறுநர்த் தாங்கிய என்றார். “தாங்கிய என்ற சொல்லுக்கு மற்றொரு பொருளுமுண்டு. தாங்குதல் என்பது முன்புறத்திலோ, பக்கவாட்டிலோ இருந்து பிடிப்பதைக் குறிக்காது. இந்த மூன்று இடங்களிலும் நின்று நம்மைப் பிடிப்ப வர்கள் யார் என்று நமக்குத் தெரியும். இறைவன் நம்மைத் தாங்கும் பொழுது யார் நம்மைத் தாங்கு