பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இ. அ.ச. ஞானசம்பந்தன் கிறார் என்று நமக்குத் தெரியாது. பின்னால் இருந்து தாங்குகிறான் ஆதலின் இறையருள் பின்னர் நின்று தான் காக்கும் என்பதை அறிவுறுத்தவே உறுநர்த் தாங்கிய என்றார். கோடிக்கணக்கான உயிர்களின் துயரங்களைப் போக்கிக் காப்பாற்ற வேண்டுமேயானால், அவனுடைய திருவடிகட்கு அந்த ஆற்றல் இருத்தல் வேண்டும். அது அவன்பால் உண்டு என்பதைக் குறிக்கவே மிக்க வலிமையுடைய திருவடிகள் என்ற பொருளில் 'மதன் உடை நோன்தாள்’ என்றார். நாவரசர் பெருமான் திருவையாற்றுத் தேவாரத்தில் இருபது பாடல்களில் திருவடிப் பெருமை பேசுகிறார். சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித் தொண்டர் துன்னும் நிழலாவன (திருமுறை:4-92-19) என்று பாடுவதால், உயிர்கள் துன்பமடையும்போது அவன் திருவடிக்கண் செல்லவேண்டும் என்கிறார். செல்லுதல் என்று சொல்லும் போது உடல் அமைப்பில் ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் புடைபெயர்ந்து செல்வதையே கருதுகிறோம். அதே போல உறுநர் என்ற சொல்லுக்குத் தன் திருவடிகளை வந்து அடைபவர்கள் என்று பொருள் கூறிப்போயினர் பலரும். புடைபெயர்ச்சி என்ற பொருளைக் கொள்ளத் தேவையில்லை என்பதைத் திருமுரு காற்றுப்படையே பின்னர் அறிவிக்கின்றது. சேவடி படரும் செம்மல் உள்ளமொடு செலவு நீ நயந்தனை ஆயின்...