பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 13 நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே (அடி 62-66) என்பதால் உறுநர் என்பதற்கு மனத்தால் அவன் திருவடிகளை நாடவேண்டும் என்று எண்ணிய உடனேயே அவன் உயிர்களைத் தாங்குகிறான் என்று பொருள் கொள்வது பொருத்தமுடையதாகிறது. திருவடிப்பெருமையை இந்த அடியிற் பேசிய நக்கீரர், திருவடியில் தொடங்கி மேலே பார்த்துக் கொண்டு செல்லும்போது அடுத்துக் காண்பது அவனுடைய திருக்கைகளையே ஆகும். எப்படிப் பட்ட கைகள்? மிக நீண்ட கைகள்! தன்பால் உற்றவர் களைத் திருவடி தாங்குகிறது. தன்னிடம் சரணமடை யாமல் ஆணவம் காரணமாகத் துரத்தே நின்று கொடுமை புரிவோரை இந்தக் கை நீண்டுசென்று அழிக்கின்றது. எத்தகைய பகையையும் அழிக்கும் ஆற்றலுடையது ஆதலின் செல் உறழ் தடக்கை' என்றார். இங்குச் செல் என்பதற்கு மேகம் என்று மட்டும் பொருள் கொள்ளாமல் அதன்கண் தோன்றும் இடியையே பொருளாகக் கொள்கின்றோம். செல்' என்பதற்கு மேகம் என்றே பொருள் கொண்டாலும் கைம்மாறு கருதாமல் வாரி வழங்குகின்ற மேகத்தைப் போன்ற கையையுடையவன் என்றும் கருத முடியும். ஒருவனுக்கு வேறுபட்ட இருவகை ஆற்றல்களை அடுத்தடுத்து வரும் இரண்டு அடிகளிற் பேசுகிறார், தாள் என்பதும் தடக்கை என்பதும் ஒருவனுக்குரிய இரண்டு உறுப்புக்கள். ஒன்று காக்கின்றது மற்றது. அழிக்கின்றது என்றால், இது எவ்வாறு முடிக்கின்றது இந்தப் பகையை அழித்தலுக்கோ, அண்டியவர்களைக்