பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இ. அ.ச. ஞானசம்பந்தன் காப்பதற்கோ ஏதேனும் தூண்டுகோல் உண்டா? இல்லை அவனே செய்கிறானா என்ற ஐயத்தைத் தோற்றுவிப்பவர்க்கு விடை கூறுபவர் போலத் தாங்கும் செயலுக்குத் தூண்டுகோலாக இருப்பவள் தாய் என்ற பொருளில் மறு இல் கற்பின் வாணுதல் கணவன் என்றார். தாங்கும் செயலுக்கு உறுதுணை யாக நிற்கும் தாயே, அழித்தல் தொழிலுக்கும் மூலமாக இருக்கின்றாள். தன்னுடைய பிள்ளைகளைக் காக்க அமைதியே வடிவான தாய்கூட வீரத்தைக் காட்டிப் போர் புரிவாள். தன்பால் சரணமென்று வந்தவர்களைத் தாங்கி அவர்களுக்கு அமைதியைத் தந்தவுடன் இவர் களுக்குத் துன்பம் செய்தவர்கள் யார் என்ற கருத்தில் அன்னை தேடுகிறாள். ஆணவம் கொண்ட அசுரப் பகை புறத்தே நிற்பது தெரிகின்றது. ஆதலின், தடக்கையால் அப்பகையை அழிக்கின்றாள். காத்தல், அழித்தல் ஆகிய இரண்டையுமே செய்வதால் சக்தி என்று பெயர் பெறுகிறாள். இந்தச் சக்தி அவனுள் அடங்கியிருக்கும் போது நிலையியற் சக்தி என்றும், வெளிப்பட்டுப் பணிபுரியும் போது இயங்கியற் சக்தி என்றும் சொல்லப்பெறும். - பாடலில் கண்டுள்ள இரண்டு அடிகள் சற்று விநோதமானவை. சக்திதான் தொழிற்படுகிறாள். எதன் மூலமாக: தலைவனாகிய முருகன் மூலமாக, தொழிற்படும் ஆற்றலை முருகனுக்குத் தந்தது யார்? சக்தி. எனவே, அவனுடைய செயற்பாடு இரண்டை யும் கூறிய நக்கீரர் அந்தச் செயற்பாடுகளின் மூல காரணத்தை மிக அழகாக வாணுதல் கணவன்' எனறாா. . (2001ള് பேராசிரியரால் எழுதப்பெற்றது )