பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - சில சிந்தனைகள் உலகப் பொதுமறையென்று பலராலும் போற்றிக் கொண்டாடப்படும் திருக்குறள், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் தோன்றிய ஒரு பெரு நூலாகும். வாழ்க்கைக்குரிய சட்ட திட்டங்களைத் தொகுத்து நன்னெறிகளைப் புகட்டும் ஒழுக்க நூல் களை அறநெறிநூல்கள் (ethicalworks) என்று கூறுவர். வள்ளுவர் தோன்றுவதற்குச் சில ஆயிரம் ஆண்டு கள் முன்தொட்டே தமிழர்கள் சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். கிறித்துவுக்கு முன் ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டுத் தோன்றியது பழந் தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம். அது அக, புற வாழ்க்கை நெறிகளை மேலோட்டமாகச் சொல்லிச் செல்கின்றது. ஆனால் அறநெறிகள் என்று தனியே எதனையும் எடுத்துக் கூறவில்லை, தொல்காப்பியம். தொல்காப்பியத்தை அடுத்து வந்த காலத்தில் அகம்பற்றியும் புறம்பற்றியும் உதிரிப் பாடல்களாக நூற்றுக்கணக்கான பாடல்கள் தோன்றின. கிறித்து பிறப்பதற்கு இருநூறு ஆண்டுகட்கு முன்னர் இந்த உதிரிப் பாடல்களைத் தொகுத்து, புறம்பற்றிப் பேசும் நானுறு பாடல்களைப் புறநானூறு என்ற பெயரில் தந்தனர். இந்த முறையில் அகம்பற்றிய பாடல்களைத் தொகுக்கத் தொடங்கியபோது அவை ஆயிரக் கணக்கில் இருப்பதை அறிந்தனர். இருபத்தொரு அடி கள் கொண்ட ஆசிரியப்பாவும் மூன்றே அடிகளைக் கொண்ட பாவும் இந்த அகத்துறைத் தொகுப்பில் இருந்தன. அறிவு சான்ற முன்னோர், குறிப்பிட்ட சில