பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இ. அ.ச. ஞானசம்பந்தன் அடிகளுக்குமேல் உள்ள பாடல்களைப் பிரித்து, அவற்றை அகநானூறு என்றும் அவற்றைவிடச் சற்றுக் குறைவாக உள்ளவற்றை நற்றிணை என்றும் அதனி லும் குறைவாக இருப்பதைக் குறுந்தொகை என்றும் பிரித்துவைத்தனர். இவற்றையல்லாமல் மூன்று அடி களையே உடைய பாடல்கள் ஐந்து திணையிலும் இருந்தமையின் ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல் கள் என்ற முறையில் இவற்றைத் தொகுத்து ஐங்குறு நூறு எனப் பெயரிட்டனர். இத்தொகுப்புக்கள் எதிலும் அடங்காது சேர மன்னர்கள் புகழ்பாடும் நூறு பாடல்கள் அன்று கிடைத்தன. பத்துப்பத்துப் பாட்டாக அமைந்துள்ள அதனைப் பதிற்றுப் பத்து என்ற பெயரில் தொகுத் தனர். இன்று கிடைக்கும் பதிற்றுப்பத்தில் முதற் பத்தும் இறுதிப் பத்தும் காணப்படவில்லை. சேர மன்னர்கள் வரலாற்றை அறிய இந்நூல் சிறந்த கருவூலமாகும். இதே காலத்தில் நீண்ட பாடல்களாகப் புறத் திணைபற்றித் தோன்றிய பத்துப்பாடல்களைப் பத்துப் பாட்டு என்ற ஒரு தொகுப்புள் அடக்கினர். சங்கப் பாடல்கள் என்ற பெயரில் இத்தனை ஆயிரம் பாடல்கள் கிடைத்துள்ளன. புறநானூற்றின் முதல் நூறு பாடல்கள் மிகமிகப் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இத்தனை ஆயிரம் பாடல்களில் தனிப்பட்ட முறையில் அறம்பற்றிக் கூறும் எந்த ஒருநூலும் இல்லை யென்பதைக் காணலாம். புறநானூறு, பரிபாடல், அகம்பற்றிய சில பாடல்கள் என்பவற்றில் பொது