பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 17 வான அறக் கருத்துகள் தனிமனித அறக்கொள்கைகள் என்பவை இடம்பெற்றுள்ளன என்பது உண்மைதான். 'யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா” (புறம்:192) என்ற பாடல் அன்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும்கூட மனித சமுதாயம் முழு வதும் ஏற்று நடக்கவேண்டிய அறக்கருத்தைக் கூறி யுள்ளது. இதேபோல, தமக்கென வாழாப் பிறர்க் குரியாளர் இருப்பதால்தான் இவ்வுலகம் நடைபெறு கிறது என்ற ஒப்பற்ற சமுதாய அறத்தைக் கூறும் பாடல் புறநானூற்றில் அமைந்துள்ளது உண்மைதான். இத்துணை உயர்ந்த அறக் கருத்துக்களைக் கூறிய சமுதாயத்தில்,ஆயிரக்கணக்கான பாடல்கள் தோன்றிய சமுதாயத்தில் தனியாக அறநூல் என்ற ஒன்று ஏன் தோன்றவில்லை என்ற வினாவிற்கு விடை கூறுவது கடினம். சேர, சோழ, பாண்டியர் என்று எவ்வளவு பெருமையாகக் கூறினாலும் இம்மூவரும் ஆட்சி செய்தது கையகலத் தமிழ்நாட்டைத்தான். இவர் களுக்குள் ஓயாத போர் நடந்ததும் உண்மைதான். ஆனால் இவர்களில் யார் வென்றாலும் யார் தோற் றாலும் பொருளாதாரச் சேதமும், உயிர்ச்சேதமும் ஏற் பட்டதே தவிரத் தமிழர்களின் அடிப்படை வாழ்க்கை முறை எவ்வித மாற்றத்தையும் அடையவில்லை. வட நாட்டைப் பொறுத்தவரை நிலைமை வேறு. உள்நாட்டுச் சிறுபோர்களைத் தவிரப் பெரும் போர்கள், இந்தியர்கள் அல்லாத, இந்தியப் பண் பாட்டுக்கு விரோதமான கொள்கையுடைய பிற நாட்டினரோடு செய்யப்பட்ட போர்களாகும். இதன்