பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 : அ.ச. ஞானசம்பந்தன் பயனாகப் பிறர் வெற்றியடைந்த காலத்தில் தோற்ற இந்தியர்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இந்தியர்களின் அடிப்படை உரிமைகள், பண்பாடு, நாகரிகம், சமய ஈடுபாடு ஆகிய அனைத்தும் தகர்க்கப் பட்டன. - இந்த நிலையில் இந்நாட்டு மன்னர்களை வலுவுடையவர்களாக ஆக்கி, நாட்டை ஆளச்செய்ய வேண்டுமானால் அதற்கொரு சாணக்கியன் தேவைப் பட்டான். அக்காலத்தை ஒட்டித்தான் கெளடில் யனின் அர்த்த சாஸ்திரம் தோன்றிற்று. காலஞ் செல்லச்செல்ல அரசியல் வழிமுறைகள், அறங்கள் என்பவற்றைத் தொகுத்துக்கூறும் சுக்கிரநீதி போன்ற அறநூல்கள் தோன்றின. சமுதாய அறங் கூறுவதாகத் தோன்றிய மனுதர்ம சாஸ்திரம் போன்ற நூல்கள் இக்காலத்திலோ இதற்குச் சற்று முன்னோ பின்னோ தோன்றின. அரசன், அவனுக்குரிய உரிமைகள், அரசு செலுத்தும் முறை, அவன் அதிகார எல்லை, வரி வசூலிக்கும் முறை, போர் தொடுக்கும் முறை, போரில் வெற்றி காணும் வழிகள், தோற்றவர்களை நடத்தும் முறை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தன அர்த்த சாஸ்திரம் போன்ற நூல்கள். மனுதர்ம சாஸ்திரம் போன்றவை மக்கள் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி, நால்வகைச் சாதியாரும் நடந்துகொள்ள வேண்டிய முறை என்ன என்பவற்றைக் கூறியதோடு சடங்குகள், சம்பிரதாயங்கள் என்பவற்றுக்கும் முக்கியத்துவம் தந்தன.