பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் , 19 வள்ளுவர் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தில் வடநாடு இருந்த நிலை இதுதான். தமிழினம் இதே காலத்தில் மிக்க நாகரிகத்தோடும் பண்பாட்டோடும் வளர்ந்துவந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடவருடைய நாட்டில் காணப்பட்ட நால்வகைச் சாதிமுறை ஓரளவு இங்கும் இருந்தது என்பதை அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல்: பொருள்: புறத்திணை-16) என்று தொடங்கும் நூற்பாவால் அறியலாம். ஆனால் இந்தச் சாதிவேற்றுமையைப் பெரிதுபடுத்தி உயர்வு தாழ்வு கற்பிக்கும் சூழ்நிலை அன்று இங்கு இல்லை. புலன் அழுக்கற்ற அந்த ணாளன்’ என்று போற்றப்பட்ட கபிலன் பாரி மன்னன் வீட்டில் ஊன் சுவைக் கறிசோறுண்டு வாழ்ந்துவந்தான் என்பதை அறிய முடிகிறது. ஆனால் ஒரு சிலர் பிறப்பால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்துடன் வாழ்ந்ததாகவும் புறநானூறு முதலிய நூல்களிலிருந்து அறியமுடிகிறது. அந்நூலின் நாற்பத்து மூன்றாம் பாடல் ஒரு புதிய கருத்தை வெளியிடுகிறது. மாவளத்தான் என்ற சோழனும் தாமப் பல்கண்ணன் என்ற பார்ப்பனப் புலவனும் சூதாடியபொழுது நிகழ்ந்த ஒரு செயலை இப்பாடல் கூறுகிறது. அப் பாடலில் 'ஆர் புனை தெரிய நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யார் (புறம்: 43-13) எனவரும் அடிகள், அன்றைய தமிழ்ச் சமுதாயம் இருந்த ஒரு நிலையை விளக்குகிறது. அதாவது பார்ப்பனர் மனத்தை அரசர்கள் நோவச் செய்வதில்லை என்ற கருத்தை இப்புலவன் பாடுகிறான். இவ்வாறு கூறுவதால் பார்ப்பனர் சமூகம் ஏனைய சாதியினரிட