பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் ↔ 21 வற்றை ஒழிப்பதே இவர்கள் தொழிலாக இருந்தது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டுவரை இவர்கள் கை மேலோங்கிநின்றது. எனவே தமிழர் பண்பாட்டை, நாகரிகத்தைக் காப்பாற்ற ஒரு நீதிநூல் தேவைப்பட்டது. காலத்தின் கட்டாயமாக அமைந்த இந்த இக்கட்டைப் போக்க வள்ளுவப் பேராசான் தோன்றுகிறார். இப்பெருமகனாரின் முன்னர் இரண்டு வழிகள் திறந்துள்ளன. ஒன்று அழிந்துகொண்டுவரும் தமிழ் நாகரிகம், பண்பாடு என்பவற்றைத் துரக்கி நிறுத்துவ தாகும். இரண்டாவது இந்த நாகரிகம் பண்பாடு என்ப வற்றை அடிப்படையாகக் கொண்டு உலக சமுதாயம் முழுமைக்கும் பொதுவான ஒரு அறநெறிநூலைத் தோற்றுவிப்பதாகும். தெய்வப் புலவர் திருவள்ளுவர் இந்த இரண்டாவது வழியை மேற்கொள்ளும் பொழுதே, முதலாவதையும் இதனுள் சேர்த்து விட்டார். இதுவே அவருடைய தனிச்சிறப்பாகும். வள்ளுவர் மண்ணிடைத் தோன்றுவதற்கு முன்னரே சாக்கிரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் மேனாடுகளிலும், கெளடில்யன், மனு முதலியவர்கள் இந்தியாவின் வடபகுதியிலும், கன்பூசியஸ், ஷின்டோ போன்றவர்கள் கீழை நாடு களிலும் சமுதாய அற நூல்களையும், அரசருக்குரிய அறநூல்களையும் செய்துபோயினர். இவற்றையெல் லாம் நேரிடையாகவோ, அறிந்தோர் மூலமோ வள்ளுவர் கேள்விப்பட்டு அறிந்திருக்கக் கூடும். காரணம் கிரேக்க நாட்டோடும் கீழ்த்திசை நாடு களோடும் பழந்தமிழர் வாணிகத்தால் பிணைப்புண் டிருந்தனர்.