பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இ. அ.ச. ஞானசம்பந்தன் சமுதாய அறங்கூறும் பிறநாட்டு நூல்கள் தனி மனிதனைப்பற்றி அதிகம் சிந்தித்ததாகத் தெரிய வில்லை. அரச தர்மம் பேசும்போதுகூட அது ஏதோ சமுதாயத்திலிருந்து தனிப்பட்டு உயரத்தில் நிற்கும் ஒருவனுக்குச் சொல்லப்பட்ட அறமாகவே இருந்தது. மன்னனுக்கும் மக்களுக்கும் இடையேயுள்ள இடை வெளி குறைக்கப்பட்டதாக தெரியவில்லை. இவற்றை யெல்லாம் தெரிந்துகொண்ட வள்ளுவர் தாம் இயற்றப்போகும் அறநூல் இந்த இரண்டு குறை களுக்கும் இடங்கொடாமல் அமையவேண்டும் என்ற முடிவிற்கு வந்திருக்க வேண்டும். சமுதாயம் என்பது ஒருவகையில் நோக்கினால் தனி மனிதர்கள் கூட்டம்தானே! இத்தனிமனிதர் களை விட்டுவிட்டுச் சமுதாயம் முழுவதற்கும் அறங் கூறத் தொடங்கினால் தனிமனித வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? அவனுக்கென்று தனியாக ஏதும் அறநெறிகள் உண்டா? தனிமனிதன் சமுதாயத்தோடு சேரும்பொழுது எதிர்ப்படும் புதிய பிரச்சனைகளை எவ்வாறு சந்திக்க வேண்டும்? அதற்கு அவன் தயா ராக உள்ளானா என்ற வினாக்கள் வள்ளுவர் மனத்தை நிரப்பியிருக்க வேண்டும். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இப்பேராசான் தீர்க்கமான ஒரு முடிவிற்கு வந்துவிட்டார். தனி மரங்கள் சேர்ந்தே தோப்பு உருவாவதுபோலத் தனி மனிதர்கள் சேர்ந்தே சமுதாயம் உருவாகிறது. தோப்பில் ஒரேயளவாக எல்லா இடங்களிலும் மழை பெய்தாலும் பூமியிலுள்ள தண்ணிரை எல்லா மரங் களும் ஒரே மாதிரியாக இழுத்துக் கொள்வதில்லை.