பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ. 23 அதேபோலச் சமுதாய அறம் ஒரேமாதிரியாகப் பேசப்பட்டாலும் சமுதாயத்திலுள்ள தனிமனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக அதைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்வார்களென்று சொல்வதற் கில்லை. இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்துகொண்ட வள்ளுவப் பேராசான் மேலே கூறிய அறிஞர்களி லிருந்து மாறுபட்டுத் தனிமனிதனுக்குரிய அறத்தைத் தொடக்கத்திலேயே வலுவாகப் பேசத் தொடங்கி விட்டார். பற்பல அறங்களைத் தனிமனிதனை மனத்தில் வைத்துக்கொண்டே பேசிச்செல்கிறார். ஒருவகையாக இந்தத் தனிமனிதர்களைத் தாம் சொல்லிய அறவழி நிற்பவர்களாக மாற்றிய பிறகு, இத்தகையவர்கள் கூடி நடத்தும் சமுதாயம் எப்படி அமையும் என்பதைப் பேசுகிறார். இத்தகைய ஒரு சமுதாயத்திற்கு அரசனாக வருப்வன் எப்படி இருக்கவேண்டும் என்பது தொடங்கி, அரச அறம் பேசுகிறார். இவர் கூறும் அரச அறம் கெளடில்யன் முதலானவர்கள் கூறும் அரச அறங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டு நிற்பதைக் காணலாம். இதைப் பற்றிப் பின்னர் விரிவாகச் சிந்திக்கலாம். வள்ளுவர் கடவுள் நம்பிக்கையற்றவர், கடவுளைப்பற்றிக் கவலைப்படாதவர் என்று இக் காலத்தில் சிலர் கூறித் திரிகின்றனர். நூலின் முதற்பத்துக் குறளில் மானிட உயிர்கள் முன்னேற வேண்டுமானால் இறை பக்தியில் ஈடு பட்டே ஆகவேண்டும் என்பதை ஏழு குறள்களில் வலியுறுத்திப் பேசியுள்ளார். ஆதலின் வள்ளுவர்