பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இ. அ.ச. ஞானசம்பந்தன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றோ, அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றோ நினைப்பதும் கூறுவதும் அறியாமையின்பாற்படும். அப்பெருமகனாருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்றால், தாம் வழிபடும் தெய்வத்தின் பெயரை ஏன் விளக்கமாகக் கூறவில்லை என்ற வினாவை எழுப்பிக் கொண்டு சிந்திக்கத் தொடங்கினால் பல உண்மைகள் வெளிப்படும். அவர் எந்தப் பெயர் வைத்துக் கடவுளை வழி பட்டாரோ அந்தப் பெயரை வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை. அவருடைய காலத்தில் சைவம், வைணவம், ஜைனம், பெளத்தம் என்ற நான்கு சமயங் களும் தமிழகத்தில் நன்கு பரவியிருந்தன. சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களும் கடவுள் நம்பிக்கையில் ஆழ்ந்து நின்றாலும் அக்கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களைத் தந்தன. அடுத்துள்ள இரண்டு சமயங்களும் கடவுள் என்ற தனிப் பொருளைக் கருத்திற் கொள்ளவேயில்லை. நான்கும் நான்கு வழிகளைக் கடைப்பிடித்தனவேனும் முன்னைய இரண்டு சமயங்களும் கடவுள் என்ற ஒன்றை ஏற்றுக்கொண்டன, பின்னைய இரண்டும் அத்தகைய ஒன்றை ஏற்றுக்கொள்ளவேயில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் வள்ளுவர் தோன்று கிறார். தம் நூலின் முதல் அதிகாரத்திலும் பிறபகுதி களிலும் எந்த ஒரு பெயரையும் வைத்துக் கடவுளைச் சுட்டாமையின் மேலே கூறிய நான்கு சமயங்களும், தாங்கள் மேற்கொள்ளும் சமயத்தைச் சார்ந்தவர் வள்ளுவர் என்று கூறிமகிழ்ந்தன.