பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 25 நடுநிலையோடு சிந்தித்துப் பார்த்தால், வள்ளுவர் கடவுட் கொள்கையில் ஆழங்காற்பட்டு நின்றவர் என்பதும் வேண்டுமென்றே எந்த ஒரு பெயரையும் கடவுளுக்குச் சூட்டாமல் விட்டு விட்டார் என்பதும் நன்கு விளங்கும். பெயர் கூறிச் சுட்டவில்லையென்றாலும் "எண் குணத்தான்', "பொறிவாயின் ஐந்து அவித்தான்” முதலிய காரணப்பெயர்களை அக்கடவுட் பொரு ளின் இயல்புகளாக ஆசிரியர் பேசுகிறார். ஆனால் எண் குணத்தான் என்று எதனைச் சுட்டுகிறார் என்பதும் பொறிவாயில் ஐந்தவித்தான் என்று எந்த இயல்பைச் சுட்டுகிறார் என்பதும் நன்கு விளங்க வில்லை. இக் குழப்பம் காரணமாகவே எண்குணத் தான் என்பது சிவபெருமானுக்குரிய இயல்பென்று சைவரும், இதுபோலவே பிற இயல்புகளையும் தத்தமக் குரிய கடவுளர்க்கும் மூல புருடருக்கும் ஏற்றிப் பிற சமயத்தவரும் வள்ளுவரைத் தத்தம் மதத்திற்கு உரியவராக அரற்றி மலைகின்றனர். - ஒரு குறிப்பிட்ட பெயரால் கடவுளைச் சுட்ட விரும்பாத வள்ளுவர், கடவுளின் இயல்பாகக் கூறுவன ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்த தெய்வங்களின் இயல்புகளாகும் என்று கொள்வது பொருத்தமுடையதாகவும் தெரியவில்லை. - இது எவ்வாறாயினும் வள்ளுவர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அவர் கடவுள் நம்பிக்கையுடையவர் என்பதைமட்டும் உறுதியாக நம்பலாம். அவர்காலத்திலிருந்த தமிழ்ப் பண்பாடு களை அடித்தளமாக அமைத்து உலகம் முழுவதற்கும்