பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இ. அ.ச. ஞானசம்பந்தன் பொதுவான சில அறக்கோட்பாடுகளைத் தனி மனிதன், சமுதாயம், அரசன் என்ற மூன்றுக்கும் சொல்வதே வள்ளுவரின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். தமிழர் என்ற தனிப்பட்ட இனத்தார்க்கு உரிய பண்புகள் என்று கூறினால் பிற இனத்தார் அதனை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவர். அத்தகைய சிக்கல் தோன்றாமலிருக்கவே எந்த ஒரு இடத்திலும் இது தமிழினத்தின் பண்பாடு' என்று வள்ளுவர் சுட்டிக் கூறவே இல்லை. இதன் பயனாகவே எந்த இனமும் இந்த அறங்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம்காட்டத் தேவையில்லாமற் போய்விட்டது. இன்று திருக்குறள் பதிப்புகள் அமைந்துள்ள முறையில் அதிகார முறைவைப்பு ஒரே மாதிரியாகவே இருந்துவருகிறது. ஒர் அதிகாரத்தின் உள்ளே காணப் படும் பத்துக் குறள்கள் ஒரே முறைவைப்பில் இல்லை மணக்குடவர் என்ற பழைய உரையாசிரியர் பத்துக் குறள்களையும் ஒன்று இரண்டு மூன்று என்று வைத்துச் செல்கின்ற முறையை, பின்னே வந்த பரிமே லகழர் போன்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பரிமேலழகர் ஒர் அதிகாரத்தின் பின்னர் ஏன் அடுத்த் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கும் காரணங்களை எடுத்துக்காட்டி அவதாரிகை என்ற பெயரில் அதிகார முன்னுரை எழுதுகிறார். ஒரு சில இடங்களில் மிக அற்புதமாக இந்த அவதாரிகை அமைந்தாலும் ஒரு சில இடங்களில் ஏனோதானோ என்றுதான் இது அமைந்துள்ளது.