பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 27 ஒர் அதிகாரத்திலுள்ள குறள்களை முன்னும் பின்னுமாக வைப்பதில் அவரவர்கள் தமக்கு விருப்ப மான முறையைக் கையாண்டுள்ளனர். இந்த அதிகார முறை வைப்பையோ குறள்கள் அமைந்திருக்கும் வரிசை முறைமையையோ பற்றிச் சிந்திக்காமல் ஒருசில குறள்கள் மனத்தில் என்ன எண்ணத்தைத் தோற்றுவிக் கின்றன என்ற அடிப்படையில் இதனை எழுதத் தொடங்குகிறேன். - பேச எடுத்துக்கொண்ட குறளுக்குக் கூடப் பதவுரை பொழிப்புரை கூறும் நோக்கமில்லை. சொல் அமைப்பு முறையில் இலக்கண வரம்பை மீறிக்கூடப் பொருள் செய்துள்ளேன். ஆனால் அப்பொருள் சொற் பொருளன்று. இருபத்தோராம் நூற்றாண்டில் நின்று சிந்திக்கும் ஒருவனுக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் வைக்கப்பெற்ற இந்தச் சொல்ல மைப்பு என்ன என்ன எண்ணங்களைத் தோற்றுவிக் கிறது என்பதை ஓரளவு காட்டுவதற்கே இந்நூல். எழுதப்படுகிறது. இன்றுள்ள பதிப்பு முறையில் முதலாவதாக வுள்ள அதிகாரம் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்து என்ற சொல் தொல்காப்பியத்தில் கொடிநிலை கந்தழி வள்ளி' (தொல்பொருள்: புறத்திணை-27) என்று தொடங்கும் சூத்திரத்தில் வரும் ஒரு தொடராகும். இந்தச் சூத்திரத் திற்கு யாரும் சரியான பொருள் எழுதியதாகத் தெரிய

  • இந்நூல் என்றது "திருக்குறள் சில சிந்தனை"களை. இதனைத் 'திருவாசகம் சில சிந்தனைகள் போலப் பெரு நூலாக எழுதப் பேராசிரியர் எண்ணியிருந்தார். ஆனால் நூலாக முற்றுறுத்தக் காலம் இடம் தரவில்லை.