பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இ. அ.ச. ஞானசம்பந்தன் வில்லை. ஆனாலும் இதில்வரும் கடவுள் வாழ்த்து என்ற தொடரைச் சங்க இலக்கியத்தைத் தொகுத்தவர் களும் பின்னர் வந்தவர்களும் விடாமல் பின்பற்றி வந்துள்ளனர். அந்த முறை பற்றியே திருக்குறளுக்கும் இந்தத் தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது போலும். இப் பகுப்பிலுள்ள பத்துக் குறள்களில் அதிகப்படியான குறள்கள் இறைவன் திருவடிகளை வணங்க வேண்டும் என்றே பேசுகின்றன. அப்படியிருக்க, கடவுள் வாழ்த்து என்ற தலைப்பு எப்படிக் கொடுக்கப்பட்டதோ தெரிய வில்லை. இந்நூலுக்கு அண்மையில் உரைகண்ட கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலதிகாரத்திற்கு 'வழிபாடு என்ற தலைப்பைத் தந்துள்ளார். பத்தில் ஏழு குறள்களில் ‘அடிசேர வேண்டும்', 'தாளை வணங்க வேண்டும்’ என்று கூறும் அதிகாரத்திற்கு மிகப் பொருத்தமாய் அமைவது வழிபாடு என்ற தலைப்பாகும். இந்த அடிப்படையில் ஒட்டு மொத்தமாக மனத்துட்கொண்டு பார்த்தால் ஒரு சில எண்ணங்கள் மனத்திடைத் தோன்றுகின்றன. தமிழினம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு விட்டு ஆதி மனிதனில் தொடங்கி அணு யுகத்தில் வாழ்கின்ற இற்றைநாள் மனிதன்வரை எடுத்துக் கொண்டால் இவர்களிடையே சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் இருப்பதைக் காணலாம். குகையில் வாழ்ந்த ஆதி மனிதனுக்குத் தலை இருந்தது; அதற்குள் மூளையும் இருந்தது. அந்த மூளை