பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 29 இன்றுபோல் தொழிற்பட்டதாகத் தெரியவில்லை. வேட்டை ஆடல் முதலிய செயல்களால் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதோடு ஆதி மனிதன் நின்றுவிட்டான். அவனுடைய அறிவையும் கையையும் ஒருங்கிணைத்து முழுவதுமாகச் செயற் படுத்தும் ஆற்றலை அவன் பெற்றிருக்கவில்லை. அந்த நிலையில் அவனுடைய மனத்தைப் பொறுத்த வரையில் இரண்டு பெரிய பிரச்சினைகள்தான் நிரம்பியிருந்தன. ஒன்று அச்சம்; மற்றொன்று கவலை. முரண்பட்ட சூழலின் இடையே வாழும் அவனுக்கு, வீடு என்ற ஒன்றைக் கட்டிக்கொண்டு பலரோடு சேர்ந்து வாழத் தெரியாத அவனுக்கு அச்சம் இருந்தது நியாயம்தான். விலங்குகளைக் கண்டு அச்சம், இருளைக் கண்டு அச்சம், இயற்கைச் சீற்றங்களைக் கண்டு அச்சம், நாளை என்ன நேருமோ என்ற அச்சம், நாளைய பசியைப் போக்கிக் கொள்ள உணவு கிடைக்குமோ என்ற கவலை போன்ற அச்சங்கள் அவன் மனத்தில் நிறைந்திருந்தன என்பதை எளிதாக உணரலாம். தனியே திரிந்த அவனைச் சுற்றி இந்த அச்சங்கள் நிறைந்திருந்தன. இந்நிலையில் தனக்குத் தேவையான ஒரு பெண்ணைச் சேர்த்துக்கொண்டு வாழத் தொடங் கினான். குகையில் இருந்த அவளுக்கு உணவு தேட வேண்டுமே என்ற கவலை, அவள் மூலம் பிறந்த பிள்ளையை அச்சந்தரும் இச்சூழலிலிருந்து காக்க வேண்டுமே என்ற கவலை, இதுபோன்ற பல கவலை கள் வளரத் தொடங்கின. ஆதி மனிதனுடைய மனத்தைப் பிழிந்தால் அச்சம், கவலை என்ற இரண்டுமே அதனுள்