பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இ. அ.ச. ஞானசம்பந்தன் நிறைந்திருப்பதைக் காணமுடியும். அப்பொழுது அவனுடைய மூளை அல்லது அறிவு வளர்ச்சியடைய வில்லை. பன்னூறு ஆண்டுகளாக அந்த அறிவு மெல்ல மெல்ல வளரத் தொடங்கிற்று. சிக்கிமுக்கிக் கல்மூலம் தீ மூட்டவும், கற்களினால் ஆயுதம் செய்து விலங்கு களை வேட்டையாடவும் கற்றுக்கொண்டான். உணர்ச்சிகளை வெளியிட எண்ணங்கள் தோன்றலாயிற்று. எண்ணங்களே மொழியின் அடிப் படையில்தானே தோன்றும்! தொடக்கத்தில் எண்ணங்களை வெளிப்படுத்தச் சைகைகளைக் கையாண்ட மனிதன், நாளாவட்டத்தில் ஒலிகள் மூலம் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத் தினான். பிறகு அந்த ஒலிகள் சொல்வடிவு பெற்றன. தொடர்மொழிகளாகக் கருத்தை வெளியிடும் அளவிற்கு வளர்ச்சியடைந்தான் ஆதி மனிதன். மொழிகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மிகமிக வேகமாக அவனுடைய அறிவு வளரத் தொடங்கிற்று. சில நூறு ஆண்டுகளில் பருப்பொருள்களைப்பற்றி நினைந்து பேசுவதுடன் நுண்பொருள்கள்பற்றியும் அறியவும் பேசவும் தொடங்கினான். கருத்துக் களுக்குச் சொல்வடிவம் தந்ததுடன் சொற்களைச் சுருக்கிக் கருத்துக்களை வெளியிட முயன்றபோது பாடல் தோன்றலாயிற்று. இப்பாடல்களின் வெளிப் பாட்டில் அறிவுமட்டும் தொழிற்படவில்லை; உணர்ச்சியும் வெளிப்படலாயிற்று. இதனைக் கண்டு கொண்ட மனிதன் இந்த முறைவைப்பை மாற்றி, உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைக் கவிதைமூலம் வெளிப்படுத்தினான்.