பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 31 மனிதனின் அறிவு வளர்ச்சி, அதனை வெளிப் படுத்தும் மொழிவளர்ச்சி என்ற இரண்டும் மிகமிக வேகமாக வளர்ந்த நிலையில், மொழி எழுத்துவடிவம் (வரிவடிவம்) பெறலாயிற்று. இந்நிலையில் அவன் பேசும் எல்லாச் சொற்களும் பொருள் குறிக்கும் சொற் களாக மாறின. சொற்களால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளைக் கூட அ. உ. என்ற ஒலிக்குறிப்புக்கள் மூலம் வெளிப்படுத்தினான். அவனைச் சுற்றியுள்ள பொருட்களை ஒன்று, இரண்டு என்று எண்ணும் பழக்கமும் ஏறத்தாழ சொற்கள் தோன்றிய காலத்தி லேயே தோன்றிவிட்டது என்று கூறலாம். இந்த அறிவு வளர்ச்சி, எண்ண வளர்ச்சி, மொழி வளர்ச்சி ஆகியவற்றோடு எண் வளர்ச்சி ஆகிய கணித மும் கற்பனைக்கடங்காத வேகத்தில் வளர்ந்து, இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி முழுவதும் மனித னுடைய தலைக்குள் நிகழ்ந்த வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சியின் உச்சியில் நின்று ஆதி மனிதனைத் திரும்பிப் பார்த்தால், அவனுடைய அறிவு வளர்ச்சி யோடு ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேற்றுமை புலனாகும். அவனிலிருந்தா நாம் வந்தோம் என்றுகூட ஐயப்படும் நிலையில் உள்ளோம். நாம் பெற்றுள்ள இந்த இமாலய வளர்ச்சி ஆதிமனிதனிலிருந்து நம்மை முற்றிலுமாக வேறு படுத்திக் காட்டுகிறது. அவனுக்கும் நமக்கும் தொடர்பே இல்லை என்றுகூட நினைக்கத் தோன்று கிறது. ஆனால் என்ன வேடிக்கை! ஆதி மனிதன் மனத்தில் தோன்றிய அச்சம், கவலை என்ற இரண்டு