பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 'இராவணன் மாட்சியும் வீழ்ச்சியிலும் தொடங்கி நான் கண்ட பெரியவர்கள் வரை (மொழிபெயர்ப்பு நூல்கள் நீங்கலாக) முப்பத்தைந்து தமிழ் நூல்களை எமது தந்தையார் எழுதியுள்ளார். அவர் வாழும் காலத்திலேயே வெளிவந்த அவை இன்றும் தமிழுலகை வலம் வருகின்றன. அத்தோடு, தந்தை மகற்காற்றும் உதவியாய்ப் பண்பையும் பயனையும் பெருமிதத்தையும் எமக்கு நல்குவனவாக அவை அமைந்திருக்கின்றன. பின்னாளில் ஏதோ ஒர் உள்ளுணர்வால் உந்தப்பெற்று சொற்பொழிவுகளைப் பெருமளவு தவிர்த்தாரே தவிர, ஏதாவது இலக்கிய விஷயங்களைப் பேசியபடியும் எழுதியபடியும்தான் அவர் வாழ்க்கை கழிந்தது. முக்கியமாக டாக்டர். என்.சிவராசன், திரு. கெளரிசங்கர், யாழ்ப்பாணம் ச. மார்க்கண்டு, இலக்கியச்சிந்தனை திரு.ப. இலட்சுமணன், திரு. விஸ்வநாதன், திரு.பாரதி ஆகியோருடன் எம் வீட்டில் நேரிலும், முனைவர். ம.ரா.போ. குருசாமி, முனைவர் தெ. ஞானசுந்தரம், முனைவர் அ. மணவாளன், டாக்டர் இரவி. ஆறுமுகம், (I.P.S.) திரு.வே.இறையன்பு (I.A.S.) திரு. முருகேசன் (மின்வாரியப் பொறியாளர்) ஆகியோருடன் தொலைபேசியிலும் தமது எண்ணங் களைப் பகிர்ந்தபடியே நிறைவுக் காலத்தைச் செலவு செய்து கொண்டிருந்தார். இவர்களுடன் உரையாடி விட்டுப் பின் ஏதாவது எழுதவேண்டுமென்றால் யாழ்ப்பாணம். ச. மார்க்கண்டுவையும் திரு.கெளரி