பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 33 இதில் தமிழர், தமிழர் அல்லாதவர், சைவம், வைணவம், ஜைனம், பெளத்தம் என்பவற்றைப் புகுத்துதல் வள்ளுவர் கருத்துக்கு முற்றிலும் மாறு பட்டதாகும். - பேசப் பழகாத ஆதி மனிதன்கூட வாயைத் திறந்தவுடன் 'அ' என்ற ஒலி பிறப்பதை நாளா வட்டத்தில் புரிந்துகொண்டான். அதன் பிறகு பல காலம் கழித்து எழுத்துக்கள், சொற்கள், எண்கள் என்பவை தோன்றினாலும் இந்த ஒலிகளுக்கெல்லாம் தொடக்கமாய் இருப்பது அகரம் தானே! திராவிட இன மொழிகள், இந்தோ-ஐரோப்பிய இன மொழிகள் ஆகிய எவற்றை எடுத்துக்கொண்டாலும் தொடக்கம் அகரத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. இது நாம் புரிந்துகொள்ளக் கூடியது ஆதலின் எழுத்தெல்லாம் அகர முதல என்றார். எல்லா ஒலிகளுக்கும் மூலமாய் இருப்பதை ஆதிநாதம் (Primordial Sound) என்று கூறுவர். அதன் அடையாளமாக அகரம் பேசப்பெறுகிறது. ஆதி நாதம் என்பது பொறி புலன்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதற்கு அடையாளமாக அகரம் இருப்பது போல் காணவோ கேட்கவோ முடியாத மூலப் பொருளுக்கு அடையாளமாக இப்பிரபஞ்சம் இருக் கிறது. உலகு என்று கூறினாரேனும் பிரபஞ்சம் முழு வதையும் குறிக்கும் சொல்லாகவே இது அமைக்கப் பெற்றுள்ளது. உலகில் எப்பகுதியில் எக்காலத்தில் வாழ்பவர் களாயினும் ஒரு சிலர் தவிர ஏனையோர் கடவுளே பிரபஞ்சத்திற்குக் காரணம் என்பதை ஏற்றுக்