பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ↔ அ.ச. ஞானசம்பந்தன் கொள்வர். ஆகவே உலகம் முழுவதற்கும் பொதுவான ஒரு அறநூலைத் தர வந்தவர், மிக ஜாக்கிரதையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முறையில், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. என்று முதற் குறளை அமைக்கின்றார். . அனைத்திற்கும் மூலம் கடவுள் என்பதை அனை வரும் ஏற்றுக்கொண்டாலும், அக்கடவுளுக்கு எந்த ஒரு பெயரைக் கொடுத்தாலும் இந்த அனைவரும் தம்முள் மாறுபட்டுச் சண்டையிடுவர். இந்தச் சிக்கலை நன்றாக அறிந்திருந்தார் வள்ளுவர். எனவே கடவுளுக்குத் தமிழில் பல பெயர்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு வட சொற்களை எடுத்து, அவற்றை இணைப்பதன் மூலம், கடவுளுக்கு ஒரு புதுப்பெயர் தருகிறார், அதுவே 'ஆதி பகவன் என்பதாகும். - அவர் காலத்தில் இந்நாட்டில் பரவியிருந்த சைவம், வைணவம், செளரம், சமணம், பெளத்தம் ஆகிய சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் ஒரு சொல் வடமொழியில் இருப்பதை அறிந்த வள்ளுவர் அதனை இங்கே பயன்படுத்துகிறார். எல்லா நிகண்டு களும் பகவன் என்ற சொல்லுக்கு ஈசன், மாயோன், (திருமால்), பங்கையன் (பிரம்மா), ஜினன் (அருகன்), புத்தன், சூரியன் என்ற பொருளைத் தருகின்றன. எனவே இச்சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தகுதியைத் தந்து விட்டார் வள்ளுவர். பகவன்' என்ற சொல்லுக்குப் பதிலாக மேலே கூறப்பெற்றுள்ள எந்தச் சொல்லைக்