பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 35 கூறியிருந்தாலும் ஏனையோர் அதனை மறுப்பர். பகவன் என்று கூறிவிட்டதால் அனைவரும் இதனை ஏற்பதோடு, பகவன் என்ற சொல்லுக்குத் தாங்கள் தாங்கள் விரும்பும் பொருள்களையே தருகின்றனர். இந்தப் பெயரில் பொதுமை கண்ட வள்ளுவர் இப்பொருளுக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தனித்தன்மையை ஏற்றுகிறார். அதுவே 'ஆதி என்ற சொல்லாகும். பிரபஞ்சத்திற்கு மூலகாரணமாய் இருப்பது அப்பொருள். அப்பொருளுக்கு முன்னர், கால முன்னாயினும் இடமுன்னாயினும், எதுவும் இருந்ததில்லை. இதனால் தொடக்கம் என்பதைக் குறிக்க ஆதி என்ற சொல்லைப் பயன்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மூலமாய்த் தொடக்கமாய் அனைத் தையும் ஆக்குவதாய் உள்ள அப்பொருளுக்கு 'ஆதி பகவன் என்ற சொல் எவ்வளவு பொருத்தமாக அமை கின்றது! ‘எழுத்தெல்லாம் அகரத்தை முதலாக உடையன என்றே பலரும் பொருள் கூறிப்போயினர். எழுத்து என்ற சொல்லிற்குப் பல எழுத்துக்களின் ஒலி வடிவத் தையும் வரி வடிவத்தையும் இவர்கள், மனத்துட் கொண்டனர்போலும்! சற்று நின்று நிதானித்தால் 'அகர முதல என்ற தொடருக்கு வேறு ஏதோ ஆழ மான பொருளை வள்ளுவர் கருதினாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது. வரிவடிவம் எதுவாக இருப்பினும் 'அ' என்ற ஒலி வடிவம் அகரம் என்ற எழுத்தைச் சுட்டுகிறதா? என்று சிந்தித்தால் அகரம் என்ற எழுத்தைச் சுட்டுவதோடு மற்றொரு கருத்தை யும் அது சுட்டுகிறது என்று நினைக்கத்தோன்றுகிறது.