பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இ. அ.ச. ஞானசம்பந்தன் நம்முடைய காதுகளில் விழும் அகர ஒலி, பொறி புலன்களுக்கு அப்பாற்பட்டு, எல்லாவற்றுக்கும் மூல மாய், ஆதாரமாய் நிற்கும் ஆதிநாதத்தைச் சுட்டு கின்றதோ என்று நினைக்கத்தோன்றுகிறது. உலகு என்ற சொல்லுக்கு அர்த்தப் பிரபஞ்சம், (பொருள் உலகு), சப்தப் பிரபஞ்சம் (ஒலி உலகு) என்ற இரண்டு பொருள்களும் உண்டு. ஆதிபகவன், ஆதி நாதத்திற்கு மூலமாய் இருத்தலின் சப்தப் பிரபஞ்சத் தின் மூலமாகிறான். அடுத்து, கருத்தளவையும் கடந்து நிற்கும் ஆதிநாதத்தின் அடையாளமாகச் செவிப் பொறிக்குக் கட்டுப்பட்டு அப்பொறி புரிந்து கொள்ளும் நிலையில் அகர ஒலி வெளிப்படுமாப் போலே இந்தச் சப்தப் பிரபஞ்சத்தின் கூறாய்க் கட்பொறியும் காணுமாறு அர்த்தப் பிரபஞ்சம் நிற்கின்றது. இவ்வாறு சிந்திக்கும்பொழுது அகரத்தின் மூலமாகவுள்ள ஆதி நாதமே எல்லா எழுத்துக் களுக்கும் (சப்தங்களுக்கும்) மூலமாய் அமைவது போல ஆதி பகவனே அந்த ஆதிநாதத்திற்கும் (சப்தப் பிரபஞ்சத்திற்கும்) கட்பொறியுள் அகப்படும் அர்த்தப் பிரபஞ்சத்திற்கும் (உலகிற்கும்) மூலமாகவுள்ளான் என்ற மிக நுண்ணிய கருத்தை, இக்குறளில் தெரிவிக்கின்றாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது. "எழுத்தெல்லாம் என்ற தொடருக்கு அகரத்தின் பின்னர் வரும் எல்லா எழுத்துக்களும் என்றே முன்னையோர் பொருள்கூறிச் சென்றனர். எழுத்து என்ற சொல்லின் பகுதி எழு’ என்பதாகும். எழுத்து வடிவம் பெறக்கூடிய எல்லா ஒலிகளும் மனத்தின் அடித்தளத்தில் அணுத்திரள் வடிவாய்த் தோன்றி,