பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 37 வைகரி, பைசந்தி என்ற பகுதிகளைக் கடந்து, தொண்டைக் குழியிலுள்ள குரல்வளையின் (Larynx) உதவியால் ஓரளவு வடிவம் பெற்றுப் பின்னர் நா, அண்ணம், உதடு, பல் என்பவற்றின் உதவியால் தத்தமக்குரிய முழுவடிவைப் பெறுகின்றன. தனித்தனியாக உள்ள இந்த எழுத்துக்கள் ஒன்று சேரும்போது சொல்வடிவு பெறுகின்றன. இந்தச் சொல்லே எண்ணங்களுக்கு மூலமாய் அமைந் துள்ளது. மனிதன் ஒருவனுக்குமட்டும் எண்ணும் ஆற்றல் அமைந்துள்ளது என்று கூறுகின்றனர். அந்த எண்ணம்தானும் சொற்கள் மூலம் பிறக்கின்றது. அந்த சொற்கள் எழுத்துக்களின் கூட்டால் தோன்றுகின்றன. எழுத்து என்று வள்ளுவர் கூறினாரேனும் மிக அடிப்படையான எண்ணத்தைக் குறிக்கவே எழுத் தெல்லாம் என்ற தொடரைப் பயன்படுத்தினாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. மற்றொரு வகை யாகக் கூறினால் எவ்வளவு வளர்ச்சியடைந்த நிலை யிலும் மனிதன் மனத்தில் தோன்றுகிற எண்ணங் களுக்கு மூலமாய் அமைவது சொல் - எழுத்து - ஒலி - அகர ஒலி - ஆதி நாதம் என்ற முறையில் சிந்திக் கலாமோ என்று தோன்றுகிறது. சப்தப் பிரபஞ்சத்தின் மூலமாகவுள்ள ஆதிநாதம் பொறி புலன்களுக்கு அப்பாற்பட்டதேனும் மனித னிடத்து இறங்கி வரும்பொழுது எழுத்தாய், சொல் லாய், எண்ணங்களாய்த் தோன்றி வளர்கின்றது. நான் எண்ணுகிறேன் என்று ஒருவர் நினைக்கும்போது கூட, நான் என்பதன் பின்னேயும், எண்ணுகிறேன்