பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இ. அ.ச. ஞானசம்பந்தன் என்பதன் பின்னேயும் ஆதிநாதம் நிற்கின்றது என்பதை உணரலாம். அந்த ஆதிநாதம் இறைப்பொருளின் (ஆதி பகவன்) ஒரு கூறாய்ச் சப்த, அர்த்தப் பிரபஞ்சங்கள் தன்னிடமிருந்து வெளிப்பட்டுத் தோன்றக் காரண மாய், மூலமாய் நின்றது என்ற கருத்தை முதன் முதலில் வள்ளுவப் பெருந்தகை கூறியதைப் பின்னர் வந்த பெருமக்கள் போற்றி ஏற்றுக் கொண்டனர். பின்னர் வந்த நாவரசர் பெருமான் ஒசை ஒலி யெலாம் ஆனாய் நீயே, உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே (திருமுறை: 6:38-) என்று பாடுவது வள்ளுவரின் முதற் குறளை நினைவிற்கொண்டே பாடப்பட்டது போலும்! பெருமானுக்கு இரண்டு நூற்றாண்டுகள் பின்னர்த் தோன்றிய சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் (திருமுறை:7:3-7) என்று பாடுவதால் இப்பெருமகனாரும் திருக்குறளில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்று கொள்ளுவதில் தவறில்லை. இறை இலக்கணத்தை இவ்வளவு நுண்மையாக முதற் குறளில் பேசிய வள்ளுவனார் பார்வை, இப்பொழுது உலகிடை மாறுகின்றது. சப்த, அர்த்தப் பிரபஞ்சங்களின் தலைவனாகவும் அனைத்திற்கும் ஆதியாகவும் உள்ளவன் அவன் என்பதைச் சொல்லி யாயிற்று. உடம்பெடுத்த உயிர்கள் அனைத்தும் காட்சிக்கும் இடந்தந்து, ஏனைய பொறிகளோடு கலந்துநிற்கும் நிலை வள்ளுவரின் நினைவிற்கு வரு கின்றது. சக மனிதர்களைப்பற்றி நினைக்கும்போது அவர்கள் அறிவாற்றல் வள்ளுவரின் நினைவிற்கு