பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 39 வருகிறது. மாபெரும் அறிவாற்றலுடைய இந்த மானுட சாதி, தன்னையும் அறியாமல் ஒரு பிழையைச் செய்து கொண்டே இருக்கிறது. ஒருசிலர் அப்பிழையில் மிக மிக அழுத்தமாக நுழைந்துவிட்டனர். மிகமிகச் சிலர் தவிர ஏனையோர் அனைவரும் இப்பிழைபட்ட வழி யிலேயே செல்லத் தொடங்குகின்றனர். இவர்கள் இந்த வழியிற் செல்ல இவர்களை யார் தூண்டினார்கள்? யார் வழிகாட்டினார்கள் என்ற எண்ணம் புலவரின் மனத்தில் நிழலாடத் தொடங்கு கின்றது. மக்களிடையேயுள்ள குறைபாட்டிற்குக் காரணத்தை ஒருவகையாகக் கண்டுவிட்டார். மிகப் பழங்காலந்தொட்டே எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ரோமானிய, சீன நாகரிகங்கள் தலைதூக்கி நின்றன. இவற்றோடு ஒப்பவைத்து எண்ணத் தகுந்த முறையில் தமிழன் நாகரிகமும் மிக மேலோங்கி நின்றது. இந்த நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பெருந்துணையாகவும் நின்றது கல்வியே ஆகும். கல்வி வளர்ச்சி மனிதனை நாகரிகமுடைய வனாகச் செய்தது உண்மைதான். ஆனால் அந்த வளர்ச்சியில் ஒரு கேடும் மறைவாகப் புகுந்து நின்றதை இக்கல்வியுடையார் பலரும் அறிந்துகொள்ளத் தவறி விட்டனர். சிறந்த உணவு உடலை வளர்க்க உதவுவது உண்மைதான். ஆனால் அந்த உணவிலுள்ள நோய்க் கிருமிகள் நன்கு அழிக்கப்பட்டாலன்றி உணவே உயிர்க்கொல்லியாக மாறிவிடுவதும் உண்டு. கல்வி யின் துணைகொண்டு மனிதன் ஒஹோ என்று வளர்ந்தான். கல்வி இடங்கொண்டதும் வளர்ந்ததும் மனிதனுடைய மூளை அமைந்துள்ள தலைப்பகுதியி